SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கை கைவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

2019-04-23@ 03:43:26

சென்னை:  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடந்த எழுத்து தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்க கோரி அருணாச்சலம் என்பவர் உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வாணையத்தின் தரப்பில் சம்பந்தப்பட்ட கேள்விக்கான சரியான விடையை கண்டுபிடிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஐஐடி  பேராசிரியர் மூர்த்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அருணாச்சலத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், அந்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

 இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் உறுப்பினர் செயலர் மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வாணையம் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, முறைகேடுக்கு காரணமான  ஜி.வி.குமார், மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்  மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று  வாதிட்டார்.அப்போது, நீதிபதி, மாநிலத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றான காவல் துறை பணி விஷயத்தில் சாலையில் செல்லும் யாரோ ஒருவரிடம் ஆலோசனை கேட்கமுடியுமா, பணி நியமனத்தில் உரிய நடைமுறைகளை  பின்பற்றியுள்ளீர்களா, இந்த நீதிமன்றத்தின் விருப்பமெல்லாம் இந்த வழக்கில் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான். போலீஸ் விசாரணையை இந்த நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அதனால், நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை கைவிட முடியாது.   வினா முறைகேடு தொடர்பாக போலீஸ் கமிஷனர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறி விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு  தள்ளிவைத்தார்.மோசடி வழக்கை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ்  விசாரிக்க வேண்டும் என்ற மூர்த்தி தரப்பின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்