SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆணையத்தின் கடமை

2019-04-23@ 02:34:32

மதுரையில் நடக்கிற விஷயங்கள், தேர்தல் ஆணையத்தின் ஒப்பற்ற பெருமைக்கு புகழ் சேர்ப்பதாக இல்லை. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 6 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏப். 20ம் தேதி மதுரை மருத்துவக்கல்லூரியில், மேற்கு தொகுதி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் கலால் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் பெண் அதிகாரியான (தாசில்தார்) சம்பூரணம் உள்பட 4 பேர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகளின் போராட்டத்தையடுத்து அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி மற்றும் அவருடன் சென்ற 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அறைக்குள் நுழையும்போது, பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள் 4 பேரையும் தடுத்துள்ளனர். அப்போது எங்கிருந்தோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு வந்ததாகவும், இதையடுத்து அவர்கள் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதன் பின்னணி என்ன? பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேரும் அந்த அறையில் 3 மணிநேரம் இருந்துள்ளனர். வாக்குப்பதிவு விபரங்கள் அடங்கிய டைரியை எடுப்பதற்காக இவர்கள் சென்றதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டைரியை எடுக்க 3 மணிநேரம் ஆகுமா என்பது போன்ற விடைதெரியாத கேள்விகள் சந்தேகத்தின் அளவை அதிகரிக்கின்றன.

நடக்கிற விஷயங்களை மக்கள் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வாக்குப்பதிவு  இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி அவர்கள் மனதில் இப்போது எழுவது இயல்பே. வாக்குப்பதிவு தினத்தன்று காலையிலேயே எழுந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, வரிசையில் நின்று வாக்களித்துத் திரும்பியிருக்கிறார்கள் மக்கள். ஜனநாயக கடமையின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்