SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை அம்மணி யாருக்காக வேவு பார்க்க போய் சிக்கி கொண்டார் என்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-22@ 00:33:47

‘‘என்ன கவலையில இருக்கீங்க...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலங்கையில் ஈஸ்டர் நாளில் நூற்றுக்கணக்கானோர் தீவிரவாத தாக்குதலில் இறந்துள்ளதாக வந்துள்ள தகவல் வேதனை அளிக்கிறது... இதுபோன்ற சம்பவங்கள் எப்போது நிற்குமோ...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எனக்கும் வருத்தம் தான் என்ன செய்வது... அதுசரி.. வாக்கு எண்ணும் மையத்துக்குள் ரதகஜ படையுடன் சென்ற அம்மணி யாரு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அமைச்சர் ஒருவரின் பிரஷர் காரணமாக தான் மதுரை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அந்த அம்மணி அதிகாரி சென்றாராம்... அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவாம்... கூடவே சிலர் சென்றுள்ளார்கள்... அவர்கள் யார் என்று பிடித்து விசாரிக்க வேண்டும்... அவர்கள் டெக்னிக்கல் தரப்பு என்றால் மிஷினை ஹாக் செய்ய அழைத்து வந்து இருக்க வேண்டும்... எனினும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலாவதியான பிறகு அந்த அம்மணிக்கு பெரிய அளவில் உதவி செய்வதாகவும் விரும்பும் இடத்தில் டிரான்ஸ்பர் வழங்குவதாகவும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அரசு ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இடைத்தேர்தலில் இலையும் கிப்ட்டும் பணத்தை வாரி இறைத்தார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிப்ட் தரப்பு வாக்காளருக்கு 2 ஆயிரம், பணம்பட்டுவாடா செய்பவருக்கு 500 என்று கொடுத்துள்ளதாம்... ஆனால் இலை தரப்பு வாக்காளருக்கு மட்டும் 2 ஆயிரம் தரப்பட்டதாம்... இதனால கிப்ட் தரப்பில் இருந்து முழுமையாக வாக்காளருக்கு பணம் போய் சேர்ந்து இருக்காம்... ஆனால் இலை தரப்பில் பத்து ஓட்டுக்கு ஒரு ஓட்டுக்கான 2 ஆயிரத்தை பதுக்கிவிட்டார்களாம்... அடுக்குமாடி குடியிருப்பு, செல்வந்தர்களின் வீடுகளில் 2 ஆயிரத்தை கொடுக்கலையாம்... அதையும் கொடுத்துவிட்டதாக கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

அப்படி பணம் கிடைக்காமல் போன ஒருவரின் வீடு இலைகட்சிக்காரரின் வீடாம்... அவர் அப்படியே மேலிடத்தில் போட்டுவிட்டுட்டாராம்... நம்ப வீட்டுக்கே பணம் வரல... பொதுமக்களிடம் எப்படி பணம் போய் சேர்ந்து இருக்கும்னு கேள்வி கேட்டாராம்... இதனால தமிழகம் முழுவதும் இலைகட்சி பணத்தை சுருட்டிய நபர்களின் விவரங்களை சேகரித்து வருதாம்... திருப்போரூர்ல இந்த சுருட்டல் அதிகமாம். அதனால அந்த நபர்களை கண்டுபிடித்து கட்சியை விட்டு நீக்க மாஜி பெண் அமைச்சர் தலைமையில ஒரு குழு போடப்பட்டுள்ளதாம்.. இன்னொரு விஷயம் 2 லட்சத்துக்கும் மேலாக பணப்பட்டுவாடா செய்தவர்களுக்கு கமிஷன் கொடுப்பதாக இருக்கிறார்களாம்... பொறுப்பாளர் மூலம் அந்த பணம் விரைவில் பணப்பட்டுவாடா செய்தவர்களுக்கு வந்து சேருமாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ பாமக மாஜி அமைச்சர் வாய் திறப்பாரா ...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ அரக்கோணம் மக்களவை தொகுதி கீழ்விஷாரம் ராசாத்துபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாலையில் வாக்குப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் உள்ள நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.வேலு, பாமக முன்னாள் எம்எல்ஏ இளவழகன் ஆகியோர் காரில் அங்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் அவர்களை உள்ளே விட மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பாமகவினருடன், அதிமுகவினரும் கும்பலாக வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைய முயன்றனர்.
 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதன் பிறகு விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு, முன்னாள் எம்எல்ஏ இளவழகன், அவர் தம்பி பத்மநாபன் உட்பட 53 பேர் மீது முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது ஒரு கண்துடைப்பு வழக்காக தான் சொல்ல வேண்டும். சென்னையில் வசிக்கும் வேலு அரக்கோணத்தில் இருக்கவே கூடாது... ஆனால் அவர் எப்படி தொகுதியை விட்டு வெளியேறாமல் இருந்தார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தெர்மோகோல் அமைச்சர் சிக்கலில் மாட்டி தவிக்கிறாராமே.. அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மக்களவை தேர்தலில்  துணை விவிஐபியின் வாரிசு போட்டியிட்ட  தொகுதியில் பண சுனாமி வீசியது என்றால், தூங்காநகர் எம்எல்ஏவின் வாரிசு போட்டியிட்ட தொகுதியில் பணமழை பொழிந்ததாம். இந்த தொகுதியில் இடம் பெறும் 6 சட்டமன்ற தொகுதிகளில் தெர்மாகோல் அமைச்சர் தனது சொந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத்தருவேன் என்று எம்எல்ஏவுக்கு வாக்குறுதி அளித்தாராம்... ஆனால் வாக்குப்பதிவு முடிந்து, கணக்கு பார்த்தால், அமைச்சர் தொகுதியில் தான் மிக குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாம்... அந்த தொகுதியில் 2,93,849 வாக்குகளில் 1,83,159 அதாவது 62.33 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனராம்...

1,10,000 பேர் ஆப்சென்ட் ஆகிட்டாங்களாம்... ஏற்கனவே கட்சியில் வேட்பாளர் சீட் அறிவிப்பின்போது தனது ஆதரவாளருக்கு சீட் கிடைக்காமல் எம்எல்ஏவின் வாரிசுக்கு அளித்தபோது, எதிர்ப்பு குரல் எழுப்பினாராம் தெர்மோகோல் அமைச்சர்... பிறகு என்ன காரணமோ, எதிர்ப்பை அடக்கிக் கொண்டாராம்... இதை மனதில் வைத்துத்தான், தேர்தல் நேரத்துல காலை வாரி விட்டாரோ, அவரது தொகுதியில் இதனால்தான் வாக்குப்பதிவு குறைந்ததோ என்ற சந்தேகம் எம்எல்ஏ தரப்பினருக்கு பலமாக எழுந்துள்ளதாம்...

அதனால ஓட்டுக்கு கொடுத்த பணம் என்னாச்சு என்று தலைமை தரப்பில் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாங்களாம்... ஆனால் அமைச்சரோ, ‘‘ஓட்டு எண்ணி முடியட்டும். என் தொகுதியில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக திக்கி திணறி பேசுகிறாராம்... இலை கட்சியில அவருக்கு சிக்கல் ஆரம்பித்துவிட்டதாக  மதுரை அதிமுக வட்டாரத்தில் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்