SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறையை கொண்டாட ‘தென்னகத்து காஷ்மீரில்’ திரண்ட சுற்றுலா பயணிகள்

2019-04-21@ 17:19:45

மூணாறு: மூணாறில் விடுமுறை தினத்தை முன்னிட்டு மாட்டுப்பட்டி பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.‘தென்னகத்து காஷ்மீர்’ என்று அழைக்கப்படும் கேரள மாநிலம், மூணாறில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிகின்றனர்.

மூணாறின் முக்கிய சுற்றுலாத்தலமாக கருதப்படும் மாட்டுப்பட்டி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அத்துடன் டாப் ஸ்டேஷன், குண்டலை அணை, எக்கோ பாயின்ட் போன்ற பகுதிகளை கண்டு ரசித்த பயணிகள், மாட்டுப்பட்டி அணையில் படகில் உற்சாகமாக சவாரி ேமற்கொள்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் மூணாறில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்