SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: சமூக வலைதளங்கள் முடக்கம்... ஊரடங்கு உத்தரவு அமல்

2019-04-21@ 15:32:59

கொழும்பு: இலங்கை கொழும்பு தெமடகொட பகுதியில் 8-வதாக குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இதனால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் பிற்பகல் சுமார் 2 மணியளவில் 7வது குண்டு வெடித்தது, இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8 வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. இதில் பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை. 8-வது இடத்தில் குண்டு வெடித்ததால் இலங்கையில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு

குண்டு வெடிப்புகளை அடுத்து இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து நாட்டவர்கள் உயிரிழந்ததாக இலங்கை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பு

குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இந்திய- இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராமேஸ்வரம் கடற்படை, மண்டபம் கடலோர காவல்படை, மெரைன் நடுக்கடலிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துள்ளது. கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேரவர்கிராப்ட் ரோந்து கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டு சென்றது.

ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதயத்தை நொறுக்கும் கொடூர தாக்குதல் பின்னணியில் எந்த சக்தி இருந்தாலும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. பேஸ்புக் வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்கி இலங்கை அரசு உத்தரவிட்டது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்