SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் 3 தேவாலையங்கள், 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி... பலர் படுகாயம்

2019-04-21@ 12:31:06

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கொச்சிக்கடை சுட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது.

ஈஸ்டர் பண்டிகை;

கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததையே ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கொழும்பில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக கொச்சிக்கரை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலையம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும்.

குண்டுவெடிப்பு

இந்த சமயத்தில் இன்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தன. இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த குண்டிவெடிப்பில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் கொழும்பில் பதற்றம் நிலவுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. அங்குள்ள தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை எந்தஒரு தீவிரவாத இயக்கம் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குண்டு வெடிப்பு உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம் 947779-03082, 94112-422788, 94112-422789.

சிறிசேனா பேட்டி;

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். விரைவில் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் கண்டுபிடிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம். வெளிநாடு சென்றுள்ள நிலையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி:

இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக கொழும்பில் கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yamunariver20

  கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்