SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு

2019-04-21@ 11:21:21

லக்னோ: ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரி மற்றும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்