SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் 5 தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி... 80 பேர் படுகாயம்

2019-04-21@ 10:36:02

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 5 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கொச்சிக்கடை சுட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. இயேசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கொழும்பில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் காலையில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. அதிலும் குறிப்பாக கொச்சிக்கரை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலையம் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும்.

இங்கு ஏராளமானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த தருணத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டிவெடிப்பில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல நீர்க்கொழம்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. தொடர் குண்டு வெடிப்பால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்