SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து அபிநந்தன் பணியிடமாற்றம்: வீர்சக்ரா விருதுக்கு பரிந்துரை?

2019-04-21@ 07:26:15

புதுடெல்லி: காஷ்மீரின் ஸ்ரீநகர் விமானப்படைப் பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவு அதிகாரியாக விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக விமானங்கள் இந்திய ராணுவ முகாம்கள் மீது குண்டுவீச நமது வான்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. பாகிஸ்தான் விமானங்களை விரட்டும் முயற்சியில் இந்திய மிக்-21 ரக போர் விமானங்கள் ஈடுபட்டன. அப்போது, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் ஒன்றை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அவரது விமானமும் தாக்கப்பட்டது. பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிய அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் கைது செய்தது.

சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, நாடு திரும்பிய அபிநந்தனுக்கு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் முடிந்து, நகர் விமானப்பிரிவில் மீண்டும் இணைந்தார். பின்னர், கடந்த மாதம் அவருக்கு 4 வார கால மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அபிநந்தன் பாதுகாப்பு காரணம் கருதி நகர் விமானப்படை பிரிவில் இருந்து மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியாகின. அதோடு, அபிநந்தனை வீர்சக்ரா விருதுக்கு விமானப்படை பரிந்துரைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. போர் காலத்தில் வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ராவுக்கு பிறகான 3வது உயரிய விருதாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்