SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடங்கும் கோடை மழை தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

2019-04-21@ 00:36:45

சென்னை: தமிழகத்தில் கோடை மழை தொடங்கியுள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 11 உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்று காரணமாக சிலர் இறந்தனர். மேலும் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் காலை 11 மணி முதலே சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.குறிப்பாக வேலூரில்  அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அந்த மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேலம், தர்மபுரி, கரூர், மதுரை, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், கோவை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி அளவில் வெயில் நீடித்தது. இந்நிலையில் கோடை மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் மலை பகுதிகளான நீலகிரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதேபோல் மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி போன்ற மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவானது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்..

இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘தென்கிழக்கு வங்கக்கடலில் மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் ,இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் சூறைக்காற்று (40-50 கி.மீ. ) உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெப்பநிலை முன்கூட்டியே அதிகரித்து கடுமையான வெப்ப சலனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த கோடை மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்