SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகளுக்கு நன்றி சொன்ன சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-21@ 00:30:54


‘‘நாலு தொகுதி இடைத்தேர்தலுக்கு இலை கட்சி ரெடியாகிட்டாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இரண்டே விஷயத்தை தான் இலை கட்சி அந்த 4 தொகுதியில கையில எடுக்கப்போவதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அது என்ன இரண்டு விஷயம் மட்டும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளுக்கு தனி பிளான் வைச்சு இருக்காங்க... இந்த ெரண்டு தொகுதியிலும் இலை கட்சி தரப்புல கொடுக்கப்பட்டுள்ள சிக்னல் ‘வானமே எல்லை’ என்பதுதான். அதாவது ஒன்று மக்களை ஏதாவது  ஒரு வகையில் வசியப்படுத்தி அவங்களை ஓட்டுபோட வைச்சு நாம ஜெயிக்கணும்... வெற்றி நம் கையில்தான் இருக்கிறது என்பதை குறி வைச்சு செயல்படணும் என்று இலை தரப்பு நினைக்குது... அதற்காக ரொம்பவும் சீனியர்  அமைச்சர்கள் மற்றும் ஒரு பெரும்படையை இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் இலை தரப்பு இறக்கப்போகுதாம்... குறிப்பாக அரவக்குறிச்சி ெதாகுதியை தங்கள் மானப்பிரச்னையாக கருதுகிறார்களாம்... அதனால அங்க தேர்தல்  ஆணையம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயமில்லாமல் வாக்களிக்க ஏற்பாடு ெசய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சூலூரை பொறுத்தவரை  மற்றொரு திட்டம் பெரும்படையை இறக்கி பணத்தை கொட்டி கொடுப்பது முடியாவிட்டால் அதிகாரிகளை வளைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்...  திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாராம் ஆகிய தொகுதிகளில் புது  பார்முலாவை பயன்படுத்தப்போறாங்களாம்... ெதன்மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள், சாதிய அமைப்புகள், சாதிய தலைவர்கள், சமுதாயத்தில் செல்வாக்கு உள்ளவர்களை ரகசியமாக  சந்தித்து சரி கட்டும் முயற்சியில் ஒரு தரப்பு இறங்கி இருக்கு....’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரவக்குறிச்சிக்கு என்ன ஸ்பெஷல்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அந்த தொகுதியில் உள்ள பெருந்தலைகளை குறி வைத்து வருமான வரித்துறையை களம் இறக்கி இருக்காங்க... அவர்கள் நேரடியாக மட்டுமில்லாமல், போலீஸ், ேதர்தல் அதிகாரிகள் மற்றும் தங்களிடம் உள்ள அதிகபட்ச  அதிகாரத்தை பயன்படுத்தி பணப்பட்டுவாடா மட்டும் இல்லாமல் பணப்பறிமாற்றம் எப்படி நடக்கிறது... எந்த வேட்பாளருக்கு யாரிடம் இருந்து பணம் எந்த வழியில் வருகிறது... அதை பிடிப்பது எப்படி என்று ஸ்கெட்ச் போட்டுக்  கொண்டு இருக்கிறார்களாம்... அதனால அரவக்குறிச்சியில உள்ளவர்களில் முக்கிய தலைகள் செல்போன், வீடியோ கால் மற்றும் லேண்ட் லைனில் பேசுவதை தவிர்க்கிறார்களாம்... இரவு அல்லது மாலை நேரங்களில் ஓரிடத்தில்  சந்தித்து எல்லாவற்றையும் நேரடியாகவே பேசி டீல் முடிக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகாரிகள் பாராட்டு மழையில் நனைகிறார்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக தனக்கு வேண்டியவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு சேலம்காரர் ரகசியமாக  தனக்கு வேண்டிய அதிகாரியை நேரில் அழைத்து ஒரு பட்டியலை கொடுத்து... இந்த பட்டியலில் உள்ள அதிகாரிகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொன்னதாக சொல்ல சொல்லி இருக்கிறார்... அதை அவரும் அப்படியே  செய்தாராம். இதனால சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரொம்பவே மகிழ்ச்சி கடலில் நீந்தி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிகார வர்க்க மோதல்... ஓட்டு வங்கி அரசியலால் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்காமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. இன்ஜினியரிங் கவுன்சலிங்கை யார் நடத்துவது என்பது பிளஸ் 2 ரிசல்ட் வெளியான பிறகும் சிக்கலில் இருக்கிறது... மருத்துவம் கட் ஆப் எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை... 600 மதிப்பெண்ணுக்கு எப்படி  வைப்பார்கள் என்று தெரியாமல் ஆசிரியர்களே குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது... சர்வதேச தரத்தில் புத்தகம் இருந்தும் அதை நடத்தும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்காமல் நேரடியாக தேர்வை நடத்தியதால் பல மாணவ,  மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக கல்வித்துறையில் உள்ள ஒருவரே வேதனையோடு சொன்னாராம்... ஓட்டுக்காக அரசு பள்ளிகளை சர்வதேச தரத்தில் மாற்றப்ேபாகிறோம்னு சொல்லிவிட்டு,  மாணவ, மாணவிகளை மன இறுக்கத்தில் தள்ளியதுதான் இந்த அரசின் சாதனை என்று சொல்லி வேதனைப்படுகிறார்கள்... இதுவரை எந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் இப்படி மன அழுத்தத்தில் இருந்தது இல்லையாம்...’’  என்றார் விக்கியானந்தா.
‘‘பொறியாளர் வீட்டில் இருப்பதை போல அலுவலகத்திலேயே முடங்கி இருக்காராமே... அவருக்கு அரசு எப்டி சம்பளம் கொடுக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திருவண்ணாமலை அடுத்த செய்யாறு நகராட்சி இன்ஜினியர், நகராட்சி பகுதிகளில் நடக்கும் எந்தவித பணிகளையும் நேரில் சென்று பார்ப்பதில்லையாம். எல்லாவற்றையுமே அவரது கீழ் வேலை பார்க்கும் ஓவர்சீயர்கள் தான்  பார்க்கிறாங்களாம். அவர்களே எல்லா பணிகளையும் மேற்பார்வை செய்யறாங்களாம்.  கடமைக்கு அலுவலகத்துக்கு வருவதும், மீண்டும் வீட்டிற்கு செல்வதுமாக இருக்கிறாராம் இன்ஜினியர். பணிகள் நடக்கும் பகுதிக்கு  ஒருநாள்கூட சென்றதில்லை என்று அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களே குமுறுகின்றனர்... ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் இருக்கும்போதே பணிகள் சரியாக செய்ய மாட்டார்கள். ஆனால் அலுவலகத்தை தாண்டி எந்த  பணியையும் ஆய்வு செய்யாத இன்ஜினியரால் எப்படி தரமான பணிகள் நடக்கும் என்று பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். பல பணிகளை இன்ஜினியர் ஆய்வு செய்யாததால் கிடப்பில் இருப்பதாகவும் நகர திட்டப்பணிகள்  முடங்கிபோய் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இன்ஜினியர் மாறினால் அல்லது அவரது செயலை மாற்றினால் தான் பணிகள் தொய்வின்றி நடக்கும். இல்லையெனில் அந்த நகராட்சி முழுமையாக முடங்கும்  சூழ்நிலை தான் ஏற்படும். அதற்குள் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்