SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி

2019-04-21@ 00:22:55

சென்னை: கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை  சட்டம் 2009 12(1) (சி)ன்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கட்டாயக்கல்வி உரிமை சட்ட விதிகள் 2011 விதி  எண் 4(1)ன்படி எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் பள்ளி வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்குள் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்,  2009ஐ  நடைமுறைப்படுத்துதல் பணியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்  செய்து முடிக்க வேண்டும்.

இந்த சட்டத்தின்கீழ் விண்ணப்பத்தை பெற அந்தந்த பள்ளிகள் அல்லது அருகில் உள்ள வட்டார வளமையங்கள்/ வட்டார கல்வி அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளத்தில் பதிவேற்றம்  செய்யலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மே மாதம் 18ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளி வாரியாக  விண்ணப்பங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி  அலுவலரின் முன்னிலையில், இடம் ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு  செய்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்