SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரபேல் ஊழல் வழக்கில் அனில் அம்பானியுடன் மோடியும் சிறையில் அடைக்கப்படுவது உறுதி: ராகுல் ஆவேசம்

2019-04-21@ 00:19:24

சுபால்: ‘‘ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்துள்ள பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் முடிந்ததும் அனில் அம்பானியுடன் சேர்த்து சிறையில் தள்ளப்படுவார்’’ என ராகுல் ஆவேசமாக கூறினார்.  பீகார் மாநிலத்தில்  போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  சுபால் பகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:நாட்டை காவல் காக்கும் பணியை மேற்கொள்வதாக கூறி,  பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருகிறார். அவர், அனில் அம்பானி போன்றவர்களுக்குத்தான் காவலாளியாக இருந்தார். அவரை காவலாளி பணியிலிருந்து விடுவிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். தற்போது காவலாளி முகத்தில்  பயம் தெரிகிறது. இது தோல்வி பயம். ரபேல் ஒப்பந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டால், அவர் அனில் அம்பானி போன்றவர்களுடன் சேர்ந்து சிறையில் இருப்பார். மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சிக்கட்டும்.

பீகார் மக்களும், இந்த நாட்டு மக்களும், காவலாளி இன்னொரு முறை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.  பீகாரின் கோசி பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, ஐ.மு கூட்டணி அரசு ரூ.100 கோடி உதவி  அளித்தது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்டபோது, மோடி அரசு பீகாருக்கு 5 ரூபாய் கூட கொடுக்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நியாய் திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு  ரூ.72 ஆயிரம் நிதி அளிக்கப்படும். மோடி அரசு பல அநியாயங்களை செய்துள்ளது. அதற்கு நாங்கள் நியாயம் அளிப்போம். வெற்று வாக்குறுதிகள் அளிப்பதில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை.  மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு  வந்தால் பீகார் உட்பட நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையானதை செய்வோம். வேளாண் நிபுணர்களை கொண்டு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் கொண்டு வருவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

அமேதி மனுவில் சிக்கல்
 உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமெதி தொகுதியில் போட்டியிட ராகுல் தாக்கல் செய்த மனுவில் இணைக்கப்பட்ட ஆவணத்தில் எம்.பில் படித்து முடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பாஜ பிரச்னை கிளப்பியுள்ளது.
இந்த மனுவை நேற்று பரிசீலனை செய்த அமேதி தேர்தல் அதிகாரி, அதன் மீதான பரிசீலனையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதேபோல், ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை பற்றியும் சுயேச்சை வேட்பாளர் துருவ் ராஜ்  எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தின் எரிபொருள் ‘நியாய்’ திட்டம்
சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்தின் பெட்ரோலாக இருக்கும். இது ஏழ்மையை ஒழிக்க  நடத்தப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமிதிப்பிழப்பு, ஜிஎஸ்டி.யால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த 2014ம் ஆண்டில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு  அளிக்கப்படும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என மோடி பொய் வாக்குறுதிகள் அளித்தார்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BhuldanaAccidentMum

  மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்