SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபுதாபியில் கோயில் கட்டுவதற்கு அடிக்கல்: 50 சாமியார்கள் பங்கேற்பு

2019-04-21@ 00:18:39

துபாய்: அபுதாபியில் பிரமாண்ட கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கோயில் கட்டுவதற்கு துபாய்- அபுதாபி சாலையில்  10.9 ஹெக்டர் நிலம் அபுதாபி அரசாங்கம் வழங்கியது. இக்கோயில்  கட்டுமான பணிகளுக்கும் கோயிலை  நிர்வாக செய்யவும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது. இக்கோயிலின் மாதிரி தொடக்க நிகழ்ச்சி   2018ல் துபாயில் நடைபெற்றது.  பிரதமர் மோடி பங்கேற்று கோயிலின் மாதிரியை திறந்து வைத்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பூஜையில் பங்கேற்க தனி விமானம் மூலம் சுவாமி மஹ்ராஜ் தலைமையில் 50 சாமியார்கள் நேற்று முன் தினம் அபுதாபி  வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இளம்சிவப்பு கற்கள் பூஜையில் வைக்கப்பட்டிருந்தது .

  காலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்க   ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களில் முக்கிய பிரமுகர்கள்,அமீரக பிரமுகரக்ள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அங்கு அமைக்கபட்டு  இருந்த வளாகத்தில் பூஜை சிறப்பாக நடைபெற்றது. 2020ம் ஆண்டுக்குள் கோயில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக  அமீரகம் வருகை தந்த சுவாமி மஹராஜ் தலைமையிலான  சாமியர்களை விமான நிலையத்தில் அமீரக அமைச்சர் சேக் முபாரக் நஹ்யான் பின் முபாரக் வரவேற்றார். இந்த கோயிலை கட்டுவதற்காக அபுதாபில் வசிக்கும் இந்தியர்கள் கோடிக்கணக்கில் நன்கொைட வழங்கி வருகின்றனர்.  அதேபோல், இந்தியாவில் இருந்தும் நன்கொடைகள் அனுப்பப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்