SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 சதவீதம் சாத்தியமே!

2019-04-21@ 00:12:24

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலும் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்து
விட்டது. தேர்தல் அமைதியாக முடிந்தது அனைவருக்கும் நிம்மதியை தந்துள்ளது. ஆனால், வாக்குப்பதிவு என்பது சராசரியாக 71.87 சதவீதம் என்ற அளவில்தான் நடந்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.41 சதவீதமும் பதிவாகியுள்ளது.
பொதுவாக, கோடை வெயில் சுட்டெரித்த போதிலும், மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குப்பதிவு செய்ததை பரவலாக காண முடிந்தது. பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும், தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை, கடமை என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் நம்மை ஆளும் அரசை தேர்ந்தெடுப்பதில் மக்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பது ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டால், பாதிப்பு என்பது பொதுமக்களுக்குத்தான் என்பதை தேர்தல் முடிந்த பின்னர் உணர்ந்து வருந்தி என்ன பயன்? அடுத்து ஆட்சி மாற்றத்துக்கு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடும். அதனால், வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு வாக்காளரின் தலையாய கடமை என்பதை கல்லூரி கல்வி காலத்திலேயே இளைய சமுதாயத்தினருக்கு உணர்த்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி, பெயர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்போதுதான், ஒருவருக்கே பல தொகுதிகளில் வாக்குகள் இருப்பதை தவிர்க்க முடியும். மேலும், தேர்தலில் வாக்களிப்பதை கவுரவமான செயலாக மாற்ற வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவு செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்றால், அதற்கான காரணங்களை ஆராய வேண்டும்.
நல்ல வேட்பாளர்களை களத்தில் நிறுத்த வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களால் கட்சிகள் மக்களின் நன்மதிப்பை பெற்றால் ஜனநாயகம் தழைத்தோங்கும். மக்கள் ஆர்வமுடன் தேர்தல்களில் வாக்களிப்பார்கள். வாக்குப்பதிவும் நூறு சதவீதத்தை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்