SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை, ஈரோடு, நெல்லையில் ஒற்றை யானை அட்டகாசம்

2019-04-21@ 00:05:17

கோவை:  தமிழகத்தில் கோைட காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக விலங்குகள் அவதிப்படுகின்றன. இதனால், அருகில் இருக்கும் கிராம பகுதிகளில் நுழைந்து விடுகின்றன. இவற்றில் யானைகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. நேற்று ஒற்றை யானை  வீடு, தென்னை, பனை மரங்கள் சேதம்  செய்தது தெரியவந்தது. கோவை ஆனைகட்டி சேம்புக்கரை வனகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (58). பி.எஸ்.என்.எல் ஊழியர். இவர் தன் குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை யானை பெருமாள் வீட்டின் முன் இருந்த மதில் சுவர், ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஆகியவற்றை உடைத்து தள்ளியது. பிறகு ஓட்டு வீட்டு கூரை மற்றும் முன் பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றது. அப்போது சப்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தனர். வெளியே யானை நிற்பதையறிந்து வேறு ஒரு அறையில் பதுங்கினர். மேலும், சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்து  யானையை விரட்டினர்.

இதனைதொடர்ந்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானையை கண்காணித்து வருவதாக கோவை ரேஞ்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வாழை மரங்கள் நாசம்:  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் போலீஸ் குடியிருப்புக்குள் நேற்றுமுன்தினம் இரவு 1 மணியளவில் ஒற்றை யானை நுழைந்துள்ளது. அங்குள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்து 50 வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதேபோல், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் மலையடிவார பகுதியான சத்திரங்காட்டில் ஒற்றை யானை புகுந்தது. இந்த யானை, விவசாயிகள் சந்திரசேகர் (63), கோயில்பிச்சை (70) ஆகியோரின் 3 பனை மரங்களை வேரோடு சாய்த்தது. இதனால், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்