SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானிற்கு எவ்வித நிதியுதவியும் செய்ய கூடாது: பன்னாட்டு நாணய நிதியத்திற்கு இந்தியா எச்சரிக்கை

2019-04-20@ 20:42:45

வாஷிங்டன்: பாகிஸ்தானிற்கு எவ்விதமான நிதியுதவியும் செய்ய கூடாது என்று பன்னாட்டு நாணய நிதியமான ஐஎம்எஃப்-யை இந்தியா எச்சரித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி நடவடிக்கை கண்காணிப்புக் குழுவின் ஆய்வை சுட்டிக்காட்டி இந்திய அதிகாரிகள் இந்த கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

ஜி-7 நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்திருக்கும் நிதி நடவடிக்கை கண்காணிப்புக் குழுவில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இக்குழு ஐஎம்எஃப் மூலமாக பெறப்படும் நிதி மோசடியாக பயன்படுத்தப்படுகிறதா? தீவிரவாத அமைப்புகளுக்கு செல்கிறதா? என்பதை கண்டறிந்து தடுப்பதோடு அதன் அறிக்கையை வெளியிடும். இந்த வகையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பன்னாட்டு நிதியுதவிகள் பலவும் தீவிரவாத அமைப்புகளுக்குச் செல்வதாக நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு தெரிவித்திருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் இந்தியா பாகிஸ்தானுக்கு பன்னாட்டு நாணய நிதியம் எவ்வித நிதியுதவிகளையும் வழங்க கூடாது என எச்சரித்திருக்கிறது. ஏற்கனவே கருப்பு பட்டியலில் இருக்கும் பாகிஸ்தானிற்கு நிதியுதவி அளிக்க கூடாது என்றும் இந்தியா சுட்டிக்காட்டியிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்