SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்துப்பேட்டையில் மெகா சைஸ் பப்பாளி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை

2019-04-20@ 14:10:43

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சில தினங்களாக 4 கிலோ எடை வரை உள்ள பப்பாளி பழம் வியாபாரம் வெயிலை போன்று சூடு பிடித்துள்ளது. 1 கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தற்போது பப்பாளி பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது. டெல்டாவை புரட்டிபோட்ட கஜா புயலால் ஒரு பப்பாளி மரத்தை கூட  பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் பப்பாளி பழங்கள் சுற்று பகுதியிலிருந்து  மதுரை மார்க்கெட்டுக்கு வந்து பின்னர் முத்துப்பேட்டை பகுதிக்கு வருகிறது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படும் பப்பாளி பழம் சிறிதாக இருந்தால் ஒரு கிலோவிற்கு மேல் உள்ளது. பெரிய பப்பாளி பழம்  4 கிலோ வரை எடை கொண்டுள்ளது. இதனை மக்களும் ஆர்வத்துடன் பேரம் பேசாமல் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பப்பாளி பழம் விற்பனை செய்து வரும் பாலகுமார் கூறுகையில், பப்பாளி மரங்கள் கண்ட இடங்களில் முளைத்து வளரக்கூடிய மரம் என்பதால் இதன் அருமையை தெரியாமலே மரத்தை வளர்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை அப்படியே இருந்தாலும் அடியோடு வெட்டி வீசி வந்தனர். இப்படி பப்பாளி மரங்களை பலரும் வெட்டி அழித்து வந்ததால் தற்போது பப்பாளி பழம் வரத்து குறைந்து உள்ளது.

இங்கு வரும் பப்பாளி பழங்கள் மதுரை, திருச்சி, கரூர், தஞ்சை, செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிருந்து வருகிறது. நாங்கள் மதுரை சந்தையில் கிலோ ரூ.22க்கு வாங்கி வருகிறோம். போக்குவரத்து செலவு, ஆள் கூலி என தற்பொழுது அதிலும் செலவுகள் அதிகரித்து விட்டதால் ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை ஆகாவிட்டால் பழம் வீணாகி விடும். ஆனால் சில தினங்களாக விற்பனை அமோகமாக உள்ளது என்றார்.

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்கள்

பப்பாளி பழம் சத்துக்கள்  மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த  நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும்  வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை  பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும்  பப்பாளி சாப்பிடலாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை  நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது  இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும்  சக்தி உள்ளது. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது  முகப்பருக்களைப் போக்கி முகச் சுருக்கங்களையும் நீக்கி பொலிவு கூட்டும்  பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்