SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளத்தூர் - முள்ளூர் சாலையோரம் திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம்

2019-04-20@ 13:42:55

குளத்தூர் : குளத்தூரிலிருந்து முள்ளூர் செல்லும் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணறால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேற்கு பகுதி வழியாக முள்ளூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் வீரபாண்டியாபுரம், த.சுப்பையாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கு குளத்தூர் வழியாக வந்து செல்வர். குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அப்பகுதி கிராம மாணவர்கள் சைக்கிள் மூலமாக இந்த சாலை வழியாகத்தான் சிரமங்களுடன் செல்கின்றனர்.

  இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் குளத்தூர் ஆரம்ப பகுதியில் சாலை ஓரம்  அமைந்துள்ள இரண்டு திறந்தவெளி கிணறுகள் அப்பகுதி வழியாக வாகனத்தில் செல்வோரை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.

 கடந்த பருவ மழையின் போது கிணற்றோரங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு சாலையின் பெரும்பகுதியை கிணற்று பள்ளம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் சாலை நான்கு அடியே உள்ளதால் இப்பகுதி வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


பருவமழை காலம் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் சாலையேரம் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் கிணற்றை அகற்றவோ சாலையை சீரமைக்கவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மேலும் இரவு நேரங்களில் இப்பகுதி வழியாக ஆபத்துகளை உணராமல் வரும் வாகனங்கள் கிணறு பகுதி வரை வந்து சாலையை கடக்க முடியாமல் மீண்டும் திரும்பி செல்லும் சூழ்நிலை உள்ளது.


 இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை இருந்தாலும் வேறுவழியின்றி இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் இச்சாலையை அதிகமாக உபயோகித்து வருகின்றனர். கடந்த பருவ மழையில் மிக மோசமாக சிதிலமடைந்தது மட்டுமில்லாமல் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளால் அச்சமாகவே சாலையை கடக்க வேண்டியுள்ளது.


இந்த ஆபத்தான கிணறுகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக அதிகாரிகள் விழித்துக்கொண்டு உடனே ஆபத்தான கிணறுகளை அகற்றி சாலையையும் சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

 • roborestaurantbang

  பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்