SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தீர்த்தவாரி

2019-04-20@ 13:35:34

தென்காசி : குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று அருவிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அகஸ்தியர் அமர்ந்த புண்ணிய குற்றாலம் மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 9ம் தேதி காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், இரவில் அம்மன் வீதிஉலா நடந்தது.

விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அகஸ்தியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலையில் செண்பகாதேவி அருவியில் வைத்து தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அருவியின் மேலிருந்து மஞ்சள், சந்தனம், புஷ்பங்கள் தண்ணீரில் விடப்பட்டன. இதனால் அருவி நீர் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியது.


பின்னர் அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி தலைமையிலான அர்ச்சகர்கள் அம்மனை கையில் வைத்து புனித நீராடினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அம்மனை கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு அருவிக்கரை கல் மண்டபத்தில் வைத்து பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்திற்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. மதியம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் செல்வகுமாரி மற்றும் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றாலம் வனச்சரக அலுவலர் ஆரோக்கியசாமி, வனவர் பாண்டியராஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்