SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்த்துக்கள்

2019-04-20@ 02:59:57

பி ளஸ் 2 ரிசல்ட் வெளியாகி மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் சீர்திருத்தம் செய்யப்பட்டபிறகு அதாவது 1200 மதிப்பெண்ணில் இருந்து 600 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்ட பிறகு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மாணவர்களை விட 5 சதவீதம் மாணவிகள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். இருந்தாலும் மாணவர்களின் தோல்வி சதவீதம் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. பழைய தேர்வு முறையிலும், புதிய தேர்வு முறையிலும் தோல்வியடைந்தவர்களும் இந்தாண்டு எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சிறை கைதிகள் 45 பேர் தேர்வு எழுதி 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல், வணிகவியல், கலை, தொழிற்பாடப்பிரிவின் கீழ் எழுதிய மாணவர்கள் சராசரியாக அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 91.3 சதவீதம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை வெற்றிகரமாக கடந்து கல்லூரிக்கு செல்ல இருக்கின்றனர்.

இன்ஜினியரிங் மீதான மாணவர்களின் மோகம் குறைந்து வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இன்ஜினியரிங் படிப்பில் சேர கடுமையான போட்டியும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஆளாய் பறந்தனர். ஆனால் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தகுந்த வேலைவாய்ப்பின்றி இருப்பது அதிகரித்து வருவதால் அதன் மீது மாணவர்களுக்கு இருந்த ஈர்ப்பு வெகுவாக குறைய தொடங்கிவிட்டது. தற்போது மீண்டும் பழைய நடைமுறைக்கு மாணவர்கள் திரும்பி வருகிறார்கள். வணிகவியல், கணக்கியல், கலை, விஸ்காம் போன்ற பாடப்பிரிவின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதுமட்டுமின்றி வேலைவாய்ப்பை தரும் பல்வேறு தொழிற்கல்விகள் பெருகிவிட்டதால் மாணவர்கள் அதுபோன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் கலைக்கல்லூரியில் இடம் கிடைப்பது அரிதாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த கலைக்கல்லூரிகளை தேர்வு செய்து அதில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் இன்ஜினியரிங் படிப்புக்கு ஆகும் செலவை விட கலைக்கல்லூரி பட்டப்படிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறது. வேலைவாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. பெற்றோர்களின்  சுமையும் குறைகிறது. கல்விக்கடனுக்காக வங்கிக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. அக்கவுண்டன்ட்ஸ், சார்டட் அக்கவுண்டன்ட்ஸ், காமர்ஸ், எம்பிஏ, பிஏ ஆங்கில இலக்கியம், பிஏ ஹானர்ஸ் உள்பட பல்வேறு பட்டப்படிப்புகள் தற்போது முன்னணியில் உள்ளது. இது தவிர கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் தாங்கள் என்ன படித்தால் உடனடியாக வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என்று ஆலோசித்து மாணவர்கள் செயல்பட தொடங்கியுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • milkashake1111

  பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்