SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழல் வழக்கில் சிக்கிய பெரு நாட்டு முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் கைது செய்ய வந்ததால் விபரீதம்

2019-04-20@ 01:40:43

லீமா: ஊழல் வழக்கில் சிக்கியதால் போலீசார் கைது செய்ய வந்தபோது, பெரு நாட்டு முன்னாள் அதிபர் ஆலன் கா்ர்சியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து  கொண்டார். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் 1985ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலும். பின்னர் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலும் அதிபராக  பதவி வகித்தவர் ஆலன் கார்சியா. இவர் தனது 2வது பதவி காலத்தின்போது, பிரேசிலை சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டு  கூறப்பட்டது. ஆனால், அவர் இந்த  குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார். இருப்பினும், அவருக்கான விசாரணையை புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தின. அவற்றில் போதிய ஆதாரம் சிக்கியது.

இதைத் தொடர்ந்து, ஆலன் கார்சியாவை கைது செய்வதற்காக போலீசார் நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்றனர். அதை அறிந்ததும் அவர் தனது அறைக்கு ஓடிச்  சென்ற கதவை தாழிட்டுக் கொண்டார். அவரை கதவை திறக்கும்படி போலீசார் வலியுறுத்தினர். அப்போது, அறையில் இருந்து  துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உஷரான  போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு, கார்சியா துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். உடனே, போலீசார்  அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்