SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி.தினகரனின் அதிரடி திட்டம் அமமுகவில் இருந்து சசிகலாவை ஓரங்கட்டியதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

2019-04-20@ 01:30:18

சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு அப்பதவிக்கு டிடிவி.தினகரன் வந்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு  தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்-எடப்பாடி இணைப்பிற்கு பிறகு சசிகலாவும், தினகரனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், சசிகலா சிறைசென்ற பிறகு அவரை முன் நிறுத்தி பல்வேறு  நடவடிக்கைகளை தினகரன் எடுத்துவந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை போட்டியிட வைத்தார் சசிகலா.  இத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினகரன் வெற்றியும் பெற்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி தினகரனுக்கு கை கொடுக்கவே சசிகலாவின் சில  ஆலோசனைகளை புறம்தள்ளி வந்தார். பின்னர், அவரை நேரில் சென்று சந்திப்பதையும் தவிர்த்தார். இது சில நெருங்கிய நபர்களுக்கு தெரியவரவே அவர்களையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டார். பின்னர், நீண்ட  இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களை மனதில் வைத்து சிறையில் இருந்த சசிகலாவை சந்தித்து அமைப்பு ஒன்றை தொடங்க வேண்டும்  என்று கோரினார். அப்போது, நீங்கள் பொதுச்செயலாளராகவும், நான் துணைப்பொதுசெயலாளராகவும் இருந்து அமைப்பை நடத்துவதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  என்ற அமைப்பை  தொடங்கினார்.

அமமுகவை தொடங்கிய பிறகு அதற்கு சசிகலாவே எப்போதும் பொதுச்செயலாளராக தொடர்வார். அவரின் ஆலோசனைக்கு இணங்க நான் எப்போதும்  துணைப்பொதுச்செயலாளராகவே இருந்து செயல்படுவேன் என்று தினகரன் தெரிவித்தார். இந்தநிலையில், கட்சியை பலப்படுத்த நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.  பின்னர், மாவட்டம் தோறும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி அதில் கலந்துகொண்டார். இது தினகரனுக்கு கைகொடுக்கவே கிராமங்கள் தோறும் மக்களை நேரடியாக சென்று சந்தித்து வந்தார். அனைத்து வகையிலும் தினகரன் செல்வாக்கு உள்ள தலைவராக  உருவாகியதால் அமமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். சசிகலாவின் ஆலோசனைகளை ஏற்க மறுத்து அதை நிராகரித்து வந்தார். இந்தநிலையில், தேர்தலில்  வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது உள்ளிட்ட முடிவுகளையும் சசிகலாவிடம் கேட்காமலேயே தானே எடுத்தார். இது நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தெரிந்தும் யாரும்  இதுகுறித்து அவரிடம் கேட்க முடியவில்லை.  
இந்தநிலையில், தனக்கு கிடைத்த ஆதரவை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும் கட்சியின் இரண்டாவது நபராக செயல்பட விருப்பம் இல்லாமலும் தான் நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த கையோடு நேற்று தன்னை அமமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார் என அமமுக முக்கிய நிர்வாகிகள் தரப்பில்  கூறப்படுகிறது. சசிகலா சிறையில் இருந்து வந்தபிறகு அவர் கட்சியின் தலைவராக ஆவார் என சி.ஆர்.சரஸ்வதி, தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் கூறினாலும்  கட்சியை கைப்பற்றி, சசிகலாவை ஒதுக்கவே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்