SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாருக்கு பவர் என்பது குறித்து கிப்ட் பாக்ஸ் ரத்த சொந்தங்கள் பேசுவதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-20@ 01:22:39

‘‘சிறையில இருக்கும்போது எது நடந்தாலும் அது இனிப்பான நிகழ்வாக இருக்காது... அப்டி தானே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம்... கட்சியில் பொதுச் செயலாளராக தன்னை பதவி உயர்த்தி கொள்ளும் வைபவம் நடக்க இருக்கிறது... இவர்களை உருவாக்கியவர் சிறையில் இருக்க... இந்த நேரத்தில்  இதெல்லாம் அவசியமா என்ற கேள்வி சிறைபறவையின் ரத்த சொந்தங்களிடம் எழுந்துள்ளதாம்... அது ஏறக்குறைய வாக்குவாதம் வரை ெசன்றுள்ளது... இவர் பொதுச்  செயலாளர் ஆவதை அவரது கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல... சிறைபறவையின் தீவிர விசுவாசிகள் கூட விரும்பவில்லையாம்... அவர்கள் சிறைபறவையை நம்பிதான் இன்னும்  கட்சிக்குள் இருக்காங்களாம்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.‘‘அப்புறம்...’’‘‘இதுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது கிப்ட்பாக்ஸ் கிச்சன் கேபினட் தானாம்... கோர்ட், தேர்தல் ஆணையம், சின்னம் ஆகியவற்றை சுட்டி காட்டினார்களாம்... அப்போதும்  சிறைப்பறவை அதற்கு சம்மதிக்கவில்லையாம்... கடைசியாக கிச்சன் கேபினட், கிப்ட்பாக்ஸ்காரர், வடக்கு மண்டல நிர்வாகி எல்லோரும் சேர்ந்து இப்போது நடந்த 18 சட்டமன்ற  இடைத்தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு... அதனால சேலம்காரர் ஆட்சி கவிழ்ந்துடும்... அடுத்த ஆறு மாசத்துல ேதர்தல் வந்துடும்... அந்த நேரத்துல டெல்லியில யார்  இருப்பாங்கனு சொல்ல முடியாது... அவர்கள் நமக்கான சின்னத்தை தர மறுத்துவிட்டால் கடைசிகட்டம் வரை நீதிமன்றத்துக்கு சென்று வாங்குவதற்குள் மூச்சு திணறிவிடும்...  எனவே, இப்போது கட்சியை பதிவு செய்ய வேண்டும். அதற்கு கிப்ட் பாக்ஸ்காரரை பொதுச் செயலாளராக போட்டு விடலாம்னு ஐடியா சொன்னாங்களாம்... அப்புறம் நீங்கள் தான்  கட்சி தலைவர் எல்லா பவரும் உங்களுக்கு தான் நான் சும்மா டம்மி என்று பம்மினாராம்... அதற்கு சிறைப்பறவை ஓகே சொன்னதாக தொண்டர்கள் பேசிக் கொண்டனர்...’’  என்றார் விக்கியானந்தா.‘‘கிப்ட் பாக்ஸ்காரரை நம்ப முடியாதுன்னு ரத்த சொந்தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாமே... ’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அவங்க யாரும் கட்சியில இல்ல... நான் தான் கட்சி... எல்லாம் நான் தான் என்னை ரத்த உறவு என்ற ஒரு அந்தஸ்த்தை வைத்து எதிர்த்தால் அது வீண் வேலை... போய்  அவங்களை வேறு வேலையை பார்க்க சொல்லுங்க என்று கிப்ட் பாக்ஸ்காரர் தன்னிடம் தூது வந்தவர்களிடம் சொல்லி அனுப்பினாராம்.. அவரின் இந்த பதிலை கேட்ட ரத்த  சொந்தங்கள் சிறைபறவையிடம் முறையிட்டார்களாம்.. அதுக்கு அவர் இப்போது நடப்பது நடக்கட்டும்... நான் வெளியே வந்த பிறகு மற்ற விஷயங்களை பார்த்து கொள்கிறேன்  என்று ஆறுதல் சொன்னதாக தகவல் வெளியாகி இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலமும் தேனியும் கோடை வெப்பத்தில் தத்தளிக்கிறாங்க போலிருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தலுக்கு பிறகு காக்கிகள் மூலம் எடுத்த அறிக்கையில் தேர்தல் வெப்பம் நம்மை சுடும்... எதிர்கட்சிகளுக்கு அல்ல என்று இருக்காம்... இவ்வளவு வாரி கொட்டி கொடுத்தும்  வாக்காளர்கள் மாறியதற்கு என்ன காரணம்னு கேட்டதற்கு... ஒரு பாப்புலாரிட்டியான முகம் கட்சிக்கு தேவைப்படுது... அது இலை தரப்புல இல்ல... அதனால வாக்குகள் சிதறி  போய்விட்டது... பணமும் ஊழல் செய்து சேர்த்த பணம்தானே வாங்கிறது தப்பு இல்லை என்ற வாக்காளர்களின் மனநிலையும் இதற்கு காரணம்னு அதில் குறிப்பிடப்பட்டு  இருந்ததாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ திண்டுக்கல் வேட்பாளர் வாக்கு பதிவு முடிந்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பலையாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திண்டுக்கல் மக்களவை தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கினதுல இருந்தே, அதிமுகவினர் கடும் அதிருப்தியில இருந்தாங்களாம்... தேர்தல் பணிகளிலும் சுறுசுறுப்பாக  இயங்கலையாம்... பாமகவுக்கு தேர்தல் செலவாக அதிமுக மேலிடம் தரப்பில் பல சி  தரப்பட்டதாம்... ஆனால் மாவட்ட மேல்மட்டம் பணத்தை தரவில்லையாம்... அவங்களே  கரெக்ட் பண்ணிட்டாங்களாம்... வேறு வழியின்றி திண்டுக்கல் வந்த சேலம், அமைச்சர் சர்க்கரையிடம் பாமகவினர் புலம்பினார்களாம். அதற்கு சேலமும் சர்க்கரையும் நாங்க  கொடுத்தாச்சு இனிமேல் எதையும் எதிர்பார்க்காதீங்கனு சொல்லிட்டாங்களாம்... அப்புறம் இடைத்தேர்தல் நடக்கிற நிலக்கோட்டையை கவனிக்க வேண்டும்’ என்று அதிமுக  தரப்பில் சைசாக எஸ்கேப் ஆயிட்டாங்களாம்... நிலக்கோட்டை சட்டசபைக்கு மட்டுமே பணத்தை தாராளமாக விநியோகித்தபோது, தாங்கள் போட்டியிடுகிற மக்களவை  தொகுதியை, அதிமுகவினரை கண்டுகொள்ளாததால் பாமகவினர் கடும் டென்ஷன் ஆகிட்டாங்களாம்... இதுக்கு பேசாம தொகுதியை எங்களுக்கு ஒதுக்காமலே இருந்திருக்கலாம்  என விரக்தியில பேசுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூத்துக்குடியில என்ன நடந்தது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் புதிய கலெக்டர் பொறுப்பேற்றார். எப்போதுமே அரசியல்வாதிகளுடன் நெருக்கம்  காட்டிக் கொள்ளும் அவர் தூத்துக்குடி வந்த பிறகும் அந்த வழக்கத்தை மாற்றவில்லை. ஏற்கெனவே தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு மானிய ஸ்கூட்டர் ஆயிரக்கணக்கான  பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த பைலையே ஓரம் கட்டி விட்டனர். அப்போது தப்பித்த அவர் தேர்தல் நேரத்தில் தொடர்ந்து சர்ச்சையில்  சிக்கியுள்ளார். அதாவது, விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் இலை போட்டி வேட்பாளர் பண மழையை பொழிந்ததாக தகவல் வந்துள்ளது. இதனை முதலில் கண்டும்  காணாமலும் இருந்த கலெக்டர், உள்ளூர் விஐபியின் நெருக்குதலுக்கு பின்னரே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆளுங்கட்சியினரின் பிரஷரால் திமுக  வேட்பாளர் வீட்டில் பணம் கொட்டிக் கிடப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல் போனதாம். அதனால் தான் பிரசாரம் முடிந்த பிறகு அவரது வீட்டில் வருமான வரித்துறை  அதிகாரிகள் நுழைந்தார்களாம். ஆனால் அங்கு ரெய்டு நடத்திய அதிகாரிகள் சல்லிக்காசு கூட சிக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். இதற்கு அந்த மாவட்ட  அதிகாரி கூறித்தான் ரெய்டுக்கு சென்றோம் என வருமான வரித்துறை கூறியதாம். இதனால் ரெய்டுக்கு ஏற்பாடு செய்த அதிகாரி கப்சிப் ஆகி விட்டாராம்...’’ என்றார்  விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்