SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் முன்விரோத தகராறில் 6 பேர் மீது சரமாரி தாக்குதல்: மக்கள் சாலை மறியலால் பரபரப்பு

2019-04-20@ 01:20:24

சென்னை: திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில், 6 பேருக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்ததில் படுகாயமடைந்து அரசு  மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(39). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே  முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் தேர்தல் நாளன்று விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை பைக்குகளில் உருட்டு கட்டைகளுடன் வந்த வெளியூர் ஆட்கள் சிலர், ஈக்காடு கிராமத்துக்குள் புகுந்து சுந்தர்(45), தாமோதரன் (60), வருண் (20), அரி  (19), ஜுனித் (18), அரீஷ் (20) ஆகிய 6 பேரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

இதில், படுகாயம் அடைந்த 6 பேரையும் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கிராம  மக்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், மகேஸ்வரி தலைமையிலான போலீசார் விரைந்து  சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால், திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளதால் அங்கு  100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்