SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலைகடல் புரட்சி

2019-04-19@ 01:44:04

மக்களவை தேர்தல் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, காலை 7 மணி அளவில் இருந்தே மக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றிருந்ததன் மூலம், அவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காண முடிந்தது. இளம்வாக்காளர்களின் எண்ணிக்கையை விட நடுத்தர மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஜனநாயக கடமையின் மீது மக்களின் கவனம் திரும்பி உள்ளதை உணர முடிந்தது. வாக்களிப்பது நம்முடைய கடமை மட்டும் அல்ல, அது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் ஒரு விஷயம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

கோடை வெயிலில், அரசு பள்ளிகளின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள், கீழே இருப்பவர்களை வறுத்தெடுத்தது உண்மை. பல இடங்களில் பேன் வசதிகள் கூட இல்லாமல் தேர்தல் அலுவலர்களும், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பூத் ஏஜன்ட்களும் பணியாற்றிக் கொண்டனர். காலையில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் மக்கர் செய்ததால், முன்னதாகவே வாக்களிக்க வந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். ஜனநாயக திருவிழாவில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்தன.

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை வைத்து தமிழகத்திலும் பலமுறை வாக்கு பதிவு செய்தாகிவிட்டது. ஆனால், இன்னமும் கூட இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல், பலர் அதில் உள்ள சிவப்பு விளக்கை அழுத்திக் கொண்டு நின்ற காட்சிகளும் சர்வ சாதாரணமாக இருந்தது. சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சேர்கள் சரியாக இல்லாதது, அவர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிக்கு பதிலாக, வயதான நோயாளிகள் கழிவறைக்கு செல்ல பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும், அதிர்ச்சி தரும் விஷயங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 11 வகை அடையாளச் சீட்டு, வாக்காளர் பட்டியலில் போட்டோ ஆகியவை இருந்தும் கன்னியாகுமரியில் கள்ள ஓட்டு பதிவானது, உச்சக்கட்ட அஜாக்கிரதை. ஆயிரம் குறைகள் இருந்தாலும், இந்த தேர்தலில் மக்கள், ஒரு விரல் புரட்சிக்காக வாக்குச்சாவடிக்கு அலைகடலென திரண்டு வந்து இருந்தது மகிழ்ச்சி தரும் விஷயம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்