SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏ தேர்தலில் ஓட்டுபோட மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த போலி வாக்காளர்கள் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-19@ 00:09:18

‘‘எங்கே பார்த்தாலும் வாக்கு இயந்திரம் பழுதுன்னே செய்தி வந்துட்டு இருக்கே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆந்திராவில் வேண்டுமென்றே வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்கு பதிவு குறைந்தது. இதில் மத்திய அரசின் சதி  இருக்கிறது.. எங்களை தோற்கடிக்கும் முயற்சிகளில் ஒன்றாக இதை கருதுகிறோம் என்று தாமரையை நோக்கி பாபுகாரு  குற்றம்சாட்டினார்... அதேபோல தான் தமிழகத்திலும் பல இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது அடைந்தன. சரி  செய்வதற்கே 15 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை பல இடங்களில் தேவைப்பட்டுள்ளது. இதனால் வாக்கு பதிவு பல இடங்களில்  தாமதமானது... மேலும் வெயில் காரணமாக பல முதியோர் நிற்க முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டனர்... வாக்கு பதிவு  இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செக் செய்யும்போது சரியாக செயல்பட்ட நிலையில் தற்போது திடீரென மக்கர்  ெசய்வது ஏன்... இதில் பெரிய சதி இருப்பதாக வாக்காளர்களே குற்றம்சாட்டுகின்றனர். கூடுதல் அவகாசம் கேட்டும் தேர்தல்  ஆணையம் கண்டுகொள்ளவே இல்லையாம்... இந்த அளவுக்கு வாக்கு பதிவு மந்தமாக இருந்ததற்கு ஆளுங்கட்சி சதியே காரணம்  என்று அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களும், நடிகர்களும் நேரடியாகவே குற்றம்சாட்டுகின்றனர். பதில் அளிக்க வேண்டிய  தேர்தல் ஆணையம் அமைதி காப்பது வேதனையாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘பணப்பட்டுவாடா எப்படி...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பணப்பட்டுவாடாவை முழுமையாக இலையும் கூட்டணி கட்சிகளும் முழுமையாக முடித்துவிட்டன... குறிப்பாக இடைத்தேர்தல்  நடக்கும் பகுதிகளில் தெருவுக்கு ஒரு ஆள் என்று நிர்ணயித்து யார் ஓட்டுப்போடவில்லை என்று கணக்கெடுத்தும் யார் ஊரில் இல்லை  என்பதை கணக்கெடுத்தும்... யார் தாமதமாக வருவார்கள் என்று கணக்கெடுத்தும் தங்கள் சோர்ஸ் மூலம் ஆளுங்கட்சி பூத்  ஏஜென்ட்டுகள் மற்றும் சில அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே  தயாராக அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்ட நபர்களை போலி ஆதாரங்களை காட்டி ஓட்டு போட ைவத்துள்ளனர்... இப்படி  கள்ள ஓட்டு போட்டவர்களில் பலர் சேலம்காரருக்கும் வேண்டியவங்களாம்... இவர்கள் நாடாளுமன்ற ஓட்டு போட வேண்டாம்...  இடைத்தேர்தல் ஓட்டு ேபாட்டால் போதும் என்று வேறு ெதாகுதியில் இருந்து அழைத்து வந்தவர்களாம்... அதற்கு சில அதிகாரிகள்  மவுனசாட்சியாக இருந்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இரவோடு இரவாக ஏதோ உத்தரவு ரகசியமாக பறந்ததாமே... அது என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நேற்று முன்தினம் மாலையில் இருந்து ேநற்று காலை வரை எதிர்கட்சி வேட்பாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன  செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க காக்கிகள் நியமிக்கப்பட்டனர்... அவர்களின் ஒவ்வொரு நகர்வும் மேலிடத்துக்கு  தெரிவிக்கப்பட்டதாம்... அதை வைத்து ஆளுங்கட்சி தங்களுக்கு வேண்டிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை  மூலம் முடக்கி வைக்கும் பணிகளை மேற்கொண்டதாம்... அப்புறம் வேண்டும் என்றே சில முக்கிய பிரமுகர்கள் இருக்கும் பகுதியில்  போலீஸ், பறக்கும் படை என்று மாறி மாறி ரவுண்ட் வந்து எரிச்சலை கிளப்பிக் கொண்டே இருந்தார்களாம்... அதாவது வேட்பாளர்கள்  மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்களை பதற்றத்தில் வைத்து கவனத்தை சிதறடிப்பது போன்ற வேலைகளை செய்து  கொண்டிருந்தார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘வேலூர் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் புகாரை பெற்றே மாதத்துக்கு பல லட்சம் கல்லா கட்டுகிறாராமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ வேலூர் எல்லையான நாட்றம்பள்ளி பகுதியில் பொறுப்பில் உள்ள சாந்தமான திரி ஸ்டார் காக்கி பொறுப்பேற்றது முதல்  இதுவரை அளிக்கப்பட்ட புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்தது இல்லையாம். தங்கள் மகள்களை காணவில்லை அல்லது  கடத்தப்பட்டிருக்கிறார் என்று   பெற்றோர் புகார் அளித்தால் வழக்குக்கூட பதிவு செய்வதில்லையாம்... அதேநேரத்தில் புகார் அளித்த  பெற்றோரை தினமும் காவல் நிலையம் வரவழைத்து காலை முதல் மாலை  வரை காக்க வைத்து, அதன் பின்னர் நிதானமாக  அவர்களை அழைத்து, ‘மீண்டும் நாளை காலை ஸ்டேஷனுக்கு வா’ எனக்கூறி அனுப்பி விடுவாராம். ஆனால், புகாரில்  குறிப்பிடப்பட்டுள்ள எதிர்தரப்பினரையோ  மற்றும் பெண்ணை கடத்தியவர்கள் மீது வழக்கோ பதிவு செய்வதில்லையாம். அவர்களிடம்  ஆளை விட்டு காசு பார்க்கும் வேலையில் இறங்கி விடுவாராம். அந்த வகையில் மாதத்துக்கு பல லட்சம் தேற்றி விடுகிறாராம்...  அப்புறம், திருட்டு வழக்கு சம்பந்தமாக புகார் அளிப்பவர்கள் மீதே  சந்தேகம் கிளப்பி கேள்வி கேட்பது, ‘நீங்கள் எப்படி இவ்வளவு  நகை மற்றும் பணம் வைத்துள்ளீர்கள்?’ என தேவையற்ற கேள்வியை  கேட்டு பயமுறுத்தி அனுப்பி விடுவாராம்.நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றபின்  இதுவரை திருட்டு வழக்கில் எந்த குற்றவாளியையும் பிடிக்கவில்லை. ஆனால் இவர்  காவல் நிலையத்திற்கும், குடியிருப்புக்கும் 10 நிமிடத்திற்கு ஒருமுறை சென்று வருவாராம். ஏதோ புதுப்பெண் பார்க்க வருவதுபோல்  ஸ்டேஷன் வந்து செல்வதாக போலீசாரே புலம்பி தள்ளுகின்றனராம். மேலும் இவர் சில புரோக்கர்களை வைத்துகொண்டு மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் என பல வழிகளிலும் காசு பார்ப்பதுடன், தன்  உடனடி உயரதிகாரிக்கும் பங்கு பிரித்து கொடுத்து விடுவாராம். இதனால் உடனடி உயரதிகாரியும் இவர் என்ன வேலை செய்கிறார்  என்பதை கண்டுகொள்வதில்லையாம். தேர்தலுக்காக அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்  மட்டும் அங்கேயே உள்ளாராம். இவர் இலை கட்சிக்கு சாதகமாக பணிபுரிந்து வருவதால் இவர் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை  என்றே சக போலீசார் புலம்பி வருகின்றனர்...’’ என்று சொன்னார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்