SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம் : தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிக்கு திமுக புகார்

2019-04-18@ 16:32:36

சென்னை : பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடவிருப்பதாக தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில்;  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக  வாக்களித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மாலை 3.00 மணிக்கு மேல், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை ' வாக்குச்சாவடி கைப்பற்றிட' திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துரையினர் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச் சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இதன்மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனவும்; நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்