SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத வாக்குகள் பதிவு : சத்யபிரதா சாஹு

2019-04-18@ 16:11:59

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 55.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 61.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் ஓசூர் - 55.25 சதவீதம் , திருவாரூர் - 52.63 சதவீதம், பரமக்குடி - 45.49 சதவீதம் சதவீதமும் பதிவாகியுள்ளது.  இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 3 மணி நிலவரப்படி 57.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்கு சதவீத விவரம்;

அரக்கோணம் - 51.5 %
கரூர் -58.18 %
நாமக்கல் - 61.47 %
திருச்சி - 57.40 %
திருப்பூர் - 56 %
சேலம் - 52 %
கோவை - 49.97 %
பொள்ளாச்சி - 53.83 %
கிருஷ்ணகிரி - 56.26 %
ஸ்ரீபெரும்புதூர் - 49.07 %
ஈரோடு - 54 %
விழுப்புரம் - 59.78 %
தென்காசி - 45.58 %
காஞ்சிபுரம் - 53.15 %
சிதம்பரம் - 55.68 %
தருமபுரி - 57.78 %
ராமநாதபுரம் - 47.42 %
கடலூர்-53 %

தமிழகத்தில் தற்போதுவரை வாக்களித்து விட்டு திரும்பிய 7 முதியவர்கள் பலி

வாக்குசாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய 7 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரத்தில் காந்தம்மாள் என்பவர்
வாக்களித்து விட்டு திருப்பிய போது உயிரிழந்தார். கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம், சென்னை ஆகிய ஊர்களிலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்