SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓட்டு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில், ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

2019-04-18@ 15:21:09

சென்னை : பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க வரும் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய வசதி ஏற்படுத்தி தரவில்லை எனவும் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கோளாறு ஏற்பட்ட 384 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்,692 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்றப்படுகிறது.காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 305 எந்திரங்களில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்