SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி மக்களவை 39.49 சதவீதமும், இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவு; சத்யபிரதா சாஹு

2019-04-18@ 13:50:32

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிகபட்சமாக ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 50.74 சதவீதமும், குறைந்தபட்சமாக பெரியகுளத்தில் 32.8 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 1 மணி நிலவரப்படி 33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால், வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்கு சதவீத விவரம்;

நாமக்கல் - 41.56
சேலம் - 38 சதவீதம்
விழுப்புரம் - 49.26 சதவீதம்
கள்ளக்குறிச்சி - 49.33 சதவீதம்
திருப்பூர் - 38 சதவீதம்
ஆரணி - 49.15 சதவீதம்
நெல்லை - 36.78 சதவீதம்
நீலகிரி - 32.7 சதவீதம்
மயிலாடுதுறை - 33.36 சதவீதம்
கரூர் - 35.44 சதவீதம்
விருதுநகர் 38.40
கன்னியாகுமரி - 32


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்