SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை: தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த ரமேஷ் கண்ணா

2019-04-18@ 12:47:29

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால், தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார் நடிகரும், இயக்குனருமான  ரமேஷ் கண்ணா. மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகிறார்கள். இதில் குணச்சித்திர நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ரமேஷ் கண்ணா காலையிலே வாக்களிக்கச் சென்றார். அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தனது ஆதங்கத்தை வீடியோ மூலமாக பேசி வெளியிட்டுள்ளார் ரமேஷ் கண்ணா.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

 “ஒவ்வொரு குடிமகனுடைய கடமை ஓட்டு போடுவது என்று தேர்தல் கமிஷனே விளம்பரம் பண்ணுகிறார்கள். அந்த உணர்ச்சியுடன் காலையில் 6 மணிக்கு எல்லாம் பூத்துக்கு ஓட்டு போடப் போனேன். சுமார் 4, 5 தேர்தல்களுக்கு அங்கு தான் வாக்களித்துள்ளேன். நாகர்கோவிலுக்கு வேறு செல்ல வேண்டுமே என்று முதல் ஆளாக நின்றேன். என்ன சார் என்று கேட்டார்கள், இல்லை.. ஊருக்குப் போகணும் அதனால் சீக்கிரம் வந்தேன் என்றேன். 7 மணியளவில் வாக்களிப்பு நேரம் தொடங்கியுடன், 'ஸாரி சார்.. உங்க பெயர் லிஸ்ட்டில் இல்லை சார்' என்றார்கள்.

என்ன காரணம் என்று வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். லிஸ்ட்டில் பெயர் இல்லையே சார் என்றார்கள். லிஸ்ட்டில் பெயர் இல்லை என்றால், அது யாருடைய தவறு. அது உங்களுடைய தவறு, என்னுடைய தவறு இல்லை என்றேன். வாக்காளர் அடையாள அட்டையை வைத்து ஓட்டு போடும் உரிமையை நீங்கள் தர வேண்டும்.

'சர்கார்' என்ற படம் வந்தவுடன் தான் 49-ஏ என்ற பிரிவு மக்களுக்கு தெரிந்தது. இதையும் ஒரு பிரச்சினையாக கொண்டு வந்தால் தான் செய்வீர்களா?. எனக்கென்றுமே புரியவில்லை. அதே தெருவில், அதே வீட்டில் இருக்கும் என் மனைவிக்கு ஓட்டு இருக்கிறதாம், எனக்கு இல்லை சார் என்கிறார்கள். இது யாருடைய தவறு? இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது?

என்னுடைய ஓட்டு வீணாகப் போய்விட்டது. இனிமேல் நான் எப்படி ஓட்டு போடுவது. இப்போது நாகர்கோவில் போகப் போகிறேன். அங்கு என்னை வாக்களிக்க அனுமதிப்பார்களா?. இதற்கு அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஓட்டு போடுங்கள், ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் எப்படிப் போடுவார்கள்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்விடும். பிறகு எப்படி  ஓட்டு போட வருவார்கள். அப்புறம், கட்சிக்காரங்க மட்டும் தான் ஓட்டு போட வேண்டும். பின்பு புதிய தலைவர்கள் வருவதற்கான வாய்ப்பே கிடையாது. இதை நீங்கள் பார்த்து முடிவெடுங்கள். ஏனென்றால், சினிமாக்காரங்க சினிமாக்காரருக்கு தான் ஓட்டு போடுவார் என்ற நம்பிக்கையில் என் ஓட்டை எடுத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது” என்று பேசியுள்ளார் ரமேஷ் கண்ணா.

இதைப் போலவே நடிகர் ரோபோ சங்கரும்  வாக்களிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • milkashake1111

  பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்