SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 30 சதவீத வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக ஆரணியில் 36 சதவீதம் வாக்குகள் பதிவு

2019-04-18@ 12:17:51

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.82 வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்ட 305 இடங்களில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 525 விவிபேட் இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதால், வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்குசதவீத விவரம்;

மதுரை - 25.41 சதவீதம்
சிவகங்கை - 30 சதவீதம்
தூத்துக்குடி - 28.46 சதவீதம்
ஆரணி - 36 சதவீதம்
நெல்லை - 25.96 சதவீதம்
நீலகிரி - 28.32 சதவீதம்
மயிலாடுதுறை - 33.36 சதவீதம்
கரூர் - 21.29 சதவீதம்
திருச்சி - 21.28 சதவீதம்
தஞ்சை - 25  சதவீதம்
மத்தியசென்னை - 22.82 சதவீதம்
கோவை - 27.61 சதவீதம்
பொள்ளாச்சி - 20.66


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்