SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48 சதவீத வாக்குகள் பதிவு; சத்யபிரதா சாஹு

2019-04-18@ 10:28:22

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து , பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், 1 சதவீத அளவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அது உடனடியாக சரிசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி 6.1 சதவீத வாக்குகளும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் உள்ளதா என்பதை அனைத்து அரசியல் கட்சி ஏஜென்ட்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளித்து காட்டப்பட்டது. இதையடுத்து  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் இன்று நடைபெறும் தேர்தலில் மட்டும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,95,94,923 பேரும், பெண் வாக்காளர்கள் 3,02,69,045 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5,790 பேரும் அடங்கும்.

தேர்தல் பணியில் மட்டும் 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி, 14,400 ராணுவ வீரர்கள் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக  பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழக போலீசார் சுமார் 80 ஆயிரம் பேர், ஓய்வு பெற்ற போலீசார், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், என்எஸ்எஸ் வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் தேர்தல் பாதுகாப்பு  பணிக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 67,720 வாக்குப்பதிவு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குசதவீத விவரம்;


மதுரை - 7.42 சதவீதம்
சிவகங்கை - 5.53 சதவீதம்
தூத்துக்குடி - 7.98 சதவீதம்
ஆரணி - 8.75 சதவீதம்
நெல்லை - 2.37
நீலகிரி - 13.78
மயிலாடுதுறை 6.23


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்