SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் சுவாமி தரிசனம்

2019-04-18@ 05:02:57

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் சிறப்பு விமானத்தில் திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து  திருமலை சென்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இணை செயல் அலுவலர்  சீனிவாசராஜு, சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.

பின்னர், வகுலமாதா சன்னதி, ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்த அதிபர், உண்டியலில் காணிக்கை  செலுத்தினார். தங்க கொடிமரத்தை வணங்கிய அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம்  வழங்கி  வேதபண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். மாலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்