SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான வருமான வரி சோதனைக்கு மக்கள் பதிலடி தருவார்கள்: காங்கிரஸ் கருத்து

2019-04-18@ 05:02:52

புதுடெல்லி: ‘‘எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை ஏவி வரும் மோடி அரசுக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்’’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்  சுர்ஜிவாலா கூறி உள்ளார்.தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு திமுக.வின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில்  வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடும் உள்நோக்கத்தோடு வருமான வரி சோதனை நடத்துவதே  மோடியின் கடைசி ஆயுதமாகும்.

 இந்த தேர்தலில் பாஜ 4 பேருடன் கூட்டு சேர்ந்துள்ளது. அவர்கள், பிரதமர் மோடி, அமித் ஷா, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை. இவர்கள் தான் இந்த தேர்தலில்  போட்டியிடுகிறார்கள். இதையெல்லாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மே 23ம் தேதி பாஜ.வுக்கு சரியான பதிலடியைத் தருவார்கள்’’ என்றார்.காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எந்த கட்சியிடம் பணம் வெள்ளமாக ஓடுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும், அது ஆளும் பாஜ.தான். எதிர்க்கட்சிகள் இப்போது வறட்சியில் உள்ளன.  பணம் ஆறாக ஓடும் இடத்தை விட்டுவிட்டு, வறட்சி உள்ள இடத்தை குறிவைக்கிறார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் அழகு. இந்த அரசின் லட்சணம்’ என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்