SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் குட்கா அதிகாரியை நம்பாமல் வேறு துறையை கையில் எடுத்த சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-18@ 04:53:08

‘‘என்ன பீட்டர் ஓட்டு போட கிளம்பலையா...’’ என்று கேட்டார் விக்கியானந்தா.‘‘போகணும் முதல் ஓட்டு போட்டுட்டு காரில் மற்ற பகுதிகளை சுற்றி பார்த்துட்டு வரணும்னு ஆசையா இருக்கு... அது சரி இலை கட்சியின் இடைத்தேர்தல் பிளான் என்ன’’ என்றார் பீட்டர் மாமா.‘‘உளவுத்துறை தகவல் ஒன்றைச் சொல்கிறேன் கேளு... பணம் கிடைக்காததால இடைத்தேர்தலில் கிப்ட்காரர் கட்சி வேட்பாளர் மீது வாக்காளர்களுக்கு கோபம் ஏற்படணும். அதை அப்படியே இலை கட்சி பக்கம் திருப்பி  விடணும்... இது பிளான் நெம்பர் ஒன்... இடைத்தேர்தலில் கடும்போட்டி இருக்கும் பகுதிகளில் பணத்தை தண்ணீராக இறைக்க வேண்டும்... எதிர்கட்சிகள் கொடுக்க முயன்றால் அவர்களை ரெய்டு என்ற பெயரில் முடக்கி  வைக்கணும்... அதற்கு உள்ளூர் போலீசார் துணையாக இருக்கணும். வாக்காளர்களை பூத்துக்கு அழைத்துச் சென்று அதை ஓட்டாக மாற்ற வேண்டும். பூத் ஏஜென்ட்டுகளை தனியாக அழைத்து சரி கட்ட வேண்டும்... படியாத பூத்  ஏஜென்டுகளிடம் தகராறு செய்ய சுயேச்சைகளை தூண்டிவிடணும்... இதன் மூலம் ஏஜென்ட்டுகளின் கவனத்தை திசை திருப்பணும்... அப்புறம் வாக்கு பதிவு மையத்தில் வாக்காளர்களை அதிகமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக திசை  திருப்பும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு விரும்பும் இடத்தில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு, கரன்சி என்று பல்வேறு திட்டங்களை பேசி வைத்து இருக்கிறார்களாம்... அதை பெரும்பாலான பூத் லெவல் தேர்தல் அதிகாரிகள்  ஏற்றுக்கொள்ளவில்லையாம்... அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர வாக்காளர்கள் மூலம் வேறு திட்டங்களையும் உளவுத்துறை கொடுத்து இருக்காம்... அதுக்கு லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் கையில் உள்ள சில  அதிகாரிகளின் சொத்து பட்டியலை வைத்தும் மிரட்டவும் தயாராக இருக்க வேண்டும் என்று உளவுத்துறை அறிக்கை சொல்லுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்புறம்...’’‘‘இந்த தேர்தல்ல இலை கட்சிக்கு சேலம்காரரின் கீழ் செயல்படும் ஒரு துறை பெரிய லெவல்ல கை கொடுத்துள்ளதாக பேசிக்கிறாங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதில் ஓரளவு உண்மை இருக்கலாம்... சேலம்காரர் தனக்கு வேண்டிய குட்கா காக்கி அதிகாரி உள்பட யாரையும் தேர்தல், பண விஷயத்துல நம்பவில்லையாம்... ஆதாரத்தோடு தகவல்கள் வேண்டும் என்று நினைத்தார்...  அதற்காக சேலம்காரர் தேர்வு செய்தது தன் கீழ் விசுவாசமாக செயல்படும் ஒருதுறையை... இடைத்தேர்தல் மற்றும் இலை கட்சியின் கோட்டையாக இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர் மற்றும் அவருக்கு  வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், உறவினர்கள், தொழில் முறையாளர்களின் முகவரிகள், செல்போன் எண்கள், வங்கி கணக்குகள் உள்பட பல விவரங்களை உளவுத்துறையினர்தான், சேலம்காரருக்கு நெருக்கமான துறை  அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்... அதன் அடிப்படையில் வேட்பாளருக்கு ரொம்பவும் நெருக்கமான நபர்களின் செயல்பாடுகளை அந்த துறையினர் கடந்த ஒரு மாதத்துக்கும் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் சர்வசாதாரணமாக  தங்கள் வீட்டுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கியது குறித்து பேசியது வரை பல்வேறு ஆதாரங்களை வைத்துள்ளனர். அதில் தேவையான தகவல்களை அத்துறையினர் அளிக்க... அதை சேலம்காரர் சரியாக தன் அடிபொடிகள் மூலம்  நிறைவேற்றிக் கொண்டார் என்ற தகவலும் ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இடைத்தேர்தல் பற்றி இன்னொரு தகவலும் ஓடுதே....’’ என்றார் ‘‘எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும்... அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க... ரிசல்ட் பாசிட்டீவ்வாக இருக்க வேண்டும்.. நாம பவர்ல இருக்கோம்... பண பலமும் இருக்கு.. எல்லாவற்றையும் நம்ம ஆட்கள்  பார்த்து கொள்வார்கள்... என்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தமக்கு நம்பிக்கைக்கு உரிய ஆட்களை இடைத்தேர்தல் களத்தில் சேலம்காரர் இறக்கி  இருக்காராம்... வாக்குபதிவு முடியும் வரை தொகுதியைவிட்டு ெவளியே வரக்கூடாது... எதிர்கட்சிகளின் தேர்தல் பணிகளை எந்த வகையிலாவது முடக்கி வைத்து விடுங்க... உங்களை நம்ப வழக்கறிஞர் அணி பாதுகாக்கும் என்று  நம்பிக்கை கொடுத்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கேப்டன் பிரசாரம் எடுபடலயாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அவரே உடம்புக்கு முடியாம இருக்காரு... அரசியல்ல ஜெயிக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக ஓய்வில் இருக்க வேண்டியவரை வாகனத்தில் உட்கார வைத்து ஓட்டு கேட்க நினைச்சாங்க... அவரும் வந்தார், பேசினார்... சைகை  காட்டினார்... ஆனால் அது பெரிய அளவில் ஓட்டாக மாறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாம்... அதன் பிறகு அவர் மீண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து இருக்காராம்... மருத்துவர்களும் அவருக்கு தான் உடம்பு சரியில்லையே,  எதற்கு தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து சென்றீர்கள் என்று கடிந்து கொண்டார்களாம்... பதவிக்கு வர வேண்டும் என்கிற அண்ணியாரின் ஆசைதான் இதற்கெல்லாம் காரணம் என்று கேப்டனின் ரசிகர்கள் சொல்லி  வேதனைப்படுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்