SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று தவற விட்டால்...

2019-04-18@ 00:12:40

இன்று 17வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முழுமையான வாக்குப்பதிவு  நடைபெற வேண்டும். அது வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த நேரத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் நடுநிலை தவறி நடந்துள்ளது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தொடங்கி தேர்தல் பார்வையாளர்கள், செலவீன  பார்வையாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி வரை ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக திமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுவை பெறுவதில் இருந்து பிரசாரம் முடிக்கும் நேரம் வரை கொடுத்த தொல்லைகள் ஏராளம். அதிலும் கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என்று மிரட்டல்  விடுத்த விவகாரம் அசிங்கத்தின் உச்சகட்டம்.இதையெல்லாம் விட இந்த தேர்தலில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரிச்சோதனை புதிய வடிவத்தை கொடுத்துள்ளது. அதுவும் தமிழகத்தில் நடந்த ஐடி ரெய்டு கோர வடிவத்தை  காட்டியது. சென்னையில் அமைச்சருக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் ₹16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் இதுவரை எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. நாமக்கல்லில் ₹15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதிலும்  தேர்தல் கமிஷன் நடவடிக்கை இல்லை.

ஆனால் வேலூரில் பிடிபட்ட பணத்திற்காக தேர்தல் நிறுத்தப்படுகிறது. அதுவும் முதல்நாளில் இல்லை என்று அறிவித்து விட்டு, பிரசாரம் முடிந்த பிறகு கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இப்போது ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்கிறார்கள். இனி  அங்கும் தேர்தல் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் பணம் பிடிபட்டது அமமுக கட்சி அலுவலகம் என்பதால்தான்.இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் பட்ட வேதனை, சோதனைகளை நினைத்துப்பார்க்க வேண்டிய தருணம் இது. அதே வேளையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிகார மோதல்களால் தமிழகம்  பட்ட அவமானத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும். இன்று உங்கள் நாள். இந்த நாளை நீங்கள் தவறவிட்டால் இனி 5 ஆண்டு அதோ கதிதான். ஒரு விரல் புரட்சிக்கு தயாராகுங்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்