SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது? : வருமான வரி சோதனை குறித்து ப.சிதம்பரம் கேள்வி

2019-04-17@ 13:03:20

சென்னை : தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இந்த சோதனை கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு கனிமொழி இல்லத்திலிருந்து பணமோ, பொருளோ கைப்பற்றவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துனர்.

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தியதற்கு பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். டுவிட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி என்றும், அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019 வரை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 50 லட்சம் வேலை பறிபோனது என கூறப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின்னர் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோனது தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மோடி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இல்லை என கூறி வருவதாகவும், உலகை சுற்றுப்பார்க்கும் அவர், நாட்டில் உள்ள கிராமங்களுக்கு செல்ல மாட்டார் என்றும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்