SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிகிறது : மே மாதம் வரை தட்டுப்பாடு இல்லை

2019-04-17@ 13:02:10

கோவை: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நடப்பு ஆண்டில் போதிய பருவ மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பை கொண்டு மே மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்யமுடியும் என மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 24 வார்டுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது சிறுவாணி அணை. இதன் மொத்த உயரம், 50 அடி. நடப்பாண்டில் போதிய பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. தற்போது 12.45 அடி அளவிற்கே தண்ணீர் உள்ளது.

இதனால் அணையில் இருந்து நீர் எடுக்கும் அளவும் குறைந்துள்ளது. இதனால் 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுவாணி அணையிலிருந்து தற்போது 60 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.  மழை இல்லாததால் அணையில் நீர் மட்டம் சரிந்து வருகிறது. தற்போது உள்ள நீர் இருப்பை கொண்டு மே மாதம் இறுதி வரை குடிநீர் விநியோகம் செய்யமுடியும். நீர் பெறுவதில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சிறுவாணி குடிநீர் விநியோக்கும் வார்டுகளில் பில்லூர் குடிநீர் விநியோகிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

  • nepal

    நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழப்பு

  • himasa

    இமாசல பிரதேசத்தில் தாபா இடிந்து விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்