SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுல் 52, மில்லர் 40 ரன் விளாசல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

2019-04-17@ 07:25:26

மொகாலி: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 12 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கேல் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவரில் 38 ரன் சேர்த்தது. கேல் 30 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் பந்துவீச்சில் சாம்சன் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த அகர்வால் அதிரடியாக 12 பந்தில் 26 ரன் (1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து, ராகுல் - மில்லர் இணை 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 85 ரன் சேர்த்தது. ராகுல் 52 ரன் எடுத்து (47 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) உனத்காட் வேகத்தில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நிகோலஸ் பூரன் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மன்தீப் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மில்லர் 40 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்கர்னி வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார். 1 ரன்னுக்கு 3 விக்கெட் சரிந்தது ரன் வேகத்தை மட்டுப்படுத்தியது. கடைசி கட்டத்தில் கேப்டன் அஷ்வின் அதிரடி காட்ட, கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. அஷ்வின் 17 ரன் (4 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), முஜீப் உர் ரகுமான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் திரிபாதி அரை சதம் அடித்தார்.  பட்லர் 23, சாம்சன் 27, ரஹானே 26 ரன்கள் எடுத்தனர். பின்னி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது. அஷ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்