SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியின் குரலை எதிரொலித்த கலெக்டர் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-17@ 01:22:11

‘‘என்ன பீட்டர்,  ஒரு கலெக்டர் திடீர்னு ஸ்டேட்மென்ட் கொடுக்கிற அளவுக்கு என்ன நடந்தது..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்... அதுக்கு பின்னாடி உள்ள சதி பின்னல்களை நான் சொல்றேன் கேளு... இலை கட்சியின் விளம்பரமும், கலெக்டரின் யாரோ பின்னால் இருந்து எழுதி தந்த வசனத்தை அச்சு பிசகாமல் பேசிய பேச்சும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்குது... ஆக திட்டமிட்டே எதிர்கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் இலை கட்சிக்கு சாதகமாக செயல்படுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது... முன்பு ஐடியை பயன்படுத்தி ரெய்டு என்ற பெயரில் எதிர்கட்சி வேட்பாளர்களின் நண்பர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் தொல்லை கொடுத்தாங்க.. இப்போது வாக்குபதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இலை கட்சியின் விசுவாசமான அதிகாரிகள் அரசியல் கட்சிகளை போல வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் பாக்ஸ் பற்றிய வதந்தி ஒன்று வேகமாக பரவி வருவதை கவனிச்சிங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடந்த சில நாட்களாக ரயில், பஸ்சுனு மாறி மாறி டிராவல் பண்ணதுல நான் கவனிச்ச விஷயம் என்ன தெரியுமா... கிப்ட்பாக்ஸ்காரர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுப்பதாகவும் யாரோ வதந்தி பரப்பி விட்டுட்டாங்களாம்... இதனால சில கிராமங்களில் வேலைக்கு போகாமல் வீட்டில் ஒருவரை விட்டுவிட்டு மற்றவர்கள் வேலைக்கு போறாங்களாம்... அப்டி சென்ற பிறகும் பணம் வந்துடுச்சானு கேட்டு நச்சரிக்கிறாங்களாம்... இதை எதிர்பார்க்காத கிப்ட் தரப்பு போகும் இடமெல்லாம் எங்க வீட்டுல நாலு ஓட்டு எப்போது 20 ஆயிரம் வரும்னு நச்சரிக்கிறாங்களாம்... நாங்க அப்டி சொல்லவேயில்லை என்று வேட்பாளர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் மக்கள் நம்ப மறுக்கிறார்களாம்... ஆர்கே நகர் மாதிரி எங்களை ஏமாத்த நினைக்காத... அப்புறம் ஓட்டு மாறிப்போயிடும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்... இது எல்லாம் இலை கட்சிக்காரங்க வேலை... அவங்க தான் புரளியை கிளப்பி விட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட்டு இருக்காங்கனு கிப்ட் தலைவர் கிட்ட புலம்பினாராம்... அவரும் தலையாட்டிவிட்டு பாத்துக்கலாம்னு சொல்லிட்டு அமைதியாகிட்டாராம்... இப்போது அந்தந்த வேட்பாளர்கள் தலையில் துண்டு போட்டுகிட்டு போய் ஓட்டு கேட்காத குறைதான் போங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்பாளரை தெரியல... நடிகரை தெரியலனு பல மணிநேரம் பேச்சை கேட்ட பொதுமக்கள் பேசிக் கொண்டது தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடித்து முடியும் தருவாயில் மலைக்கோட்டை எம்பி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேச நடிகர் வந்தார். பிரசாரத்திற்கு ஆட்கள் இல்லாமல் தவித்து போயிட்டாங்களாம்.. பிரசாரத்துக்கு 1 மணிநேரம் தாமதமாக தான் வந்தாங்களாம்... இதில் பணத்துக்காக வந்த வயதான பெண்களும் முதியவர்களும் வெயிலில் இருந்து தப்பிக்க நிழலை தேடி ஓடினர்... நடிகர் பேசி முடித்து சென்ற நிலையில் வேட்பாளர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், இவர் பிரசாரம் செய்து பார்த்ததே இல்லையே என கட்சி நிர்வாகிகளே புலம்பினர். இந்தி தெரியாமல் தலையாட்டி பொம்மைகளாக இருக்க மாட்டோம் என கமல் கூறினாலும், வேட்பாளரை பார்க்காமல் எப்படி பொதுமக்கள் ஓட்டு போடுவார்கள் என கட்சி நிர்வாகிகள் தலையில் அடித்து கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியை சேர்ந்த அமைச்சர் வீட்டில் பணத்தை பதுக்கிய தகவல் சொல்லியும் தேர்தல் பறக்கும் படை பம்முதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வேலூர் மாவட்டத்தில் வீரமான அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அதில் பெரிய அளவில் பணம் சிக்கியதாக தெரியவில்லை. ஆனால் பலகோடி பணம் வீரமான அமைச்சரின் உறவினர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்... அவரது 2வது மனைவியின் நெருங்கிய உறவினர் போளூரில் வசித்து வருகிறார். குருவியின் பெயரை அடைமொழியாக கொண்ட அவரது வீட்டில் தான் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லையாம். அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததும் சிறிது அச்சத்தில் இருந்த குருவி இப்போது தெம்பாக நடைபோட்டு வருகிறதாம்...’’ என்று சொல்லிவிட்டு அமைதியானார் விக்கியானந்தா.

‘‘அதிமுகவை தோற்கடிப்பேன்னு அதே கட்சியை சேர்ந்த மாஜி அமைச்சர் சபதம் செய்து இருக்காராமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்தான்... அவர் சார்ந்த சமுதாயத்தில் அசைக்க முடியாத முக்கிய தலைவராக இருக்கிறாரு... தற்போது இவர் அதிமுக தலைமை மீதான அதிருப்தியால், தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறாராம்... கடந்த முறை முதுகுளத்தூர் எம்எல்ஏ தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கீர்த்திகா நின்றாரு... அப்போது ராஜகண்ணப்பன் அதிமுகவிற்கு எதிராக இருந்ததால், அவர் சமூக ஓட்டுகள் கிடைக்காமல் கீர்த்திகா தோல்வி அடைந்தாராம்... எனவே, இம்முறை ராமநாதபுரம், சிவகங்கை மக்களவை மற்றும் பரமக்குடி, மானாமதுரை இடைத்தேர்தல்களில், எதிராக பிரசாரம் செய்ய வேண்டாமென ராஜகண்ணப்பனிடம் அதிமுக மாசெ பேசினாராம்... இதனை ஏற்க மறுத்த ராஜகண்ணப்பன், ‘அதிமுக தோற்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்... என் பிரசாரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்