SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்., எம்.பி. சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்

2019-04-16@ 16:00:29

திருவனந்தபுரம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.  பாஜக, காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் காங். எம்பி சசி தரூரை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அரசியல் நாகரீகமான இந்த சந்திப்பு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலுக்கு சென்ற போது, சசி தரூர் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 6 தையல் போடப்பட்டு, இப்போது தீவிர சிக்கிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பிரச்சாரத்துக்கு இடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங் எம்பி சசி தரூரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: தீவிர பிரச்சாரத்துக்கு இடையே மருத்துவமனைக்கு வந்து நிர்மலா சீதாராமன் என்னிடம் நலம் விசாரித்தார். இந்திய அரசியலில் இந்தப் பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக இவரைப் பார்க்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்