SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

2019-04-16@ 15:45:30

சென்னை: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக-திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.ஷண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ.11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் ஷெய்பாலி சரண் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் குறித்து எந்த பரிந்துரையும் வருமானவரித்துறை ஒருபோதும் செய்யாது. வேலூரில் சோதனை நடத்தியது குறித்து இதுவரை 5 முறை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளோம். எனவே, தேர்தல் ஆணையம் மட்டுமே இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்கும், என்று வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்