SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை எதிரொலி: நேற்று ஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மது விற்பனை

2019-04-16@ 14:13:20

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைக்கு 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.215 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.  தமிழகத்தில் வழக்கமாக ரூ.1 லட்சத்துக்கு மதுவிற்பனையாகும் கடைகளில் ரூ.3 லட்சத்துக்கு மேல் மது விற்பனை ஆகியுள்ளது என ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தோ்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கி வருகின்ற 18ம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் விடுமுறை என்பதால் நேற்று மாலையில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியா்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி மக்களவை தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தோ்தல் பிரசாரங்கள் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தோ்தலை முன்னிட்டு இன்று முதல் தோ்தல் நடைபெறும் 18ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மது உற்பத்திக்கும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுவை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விடுமுறை என்பதால், கடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், சுமார் 423 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக, 165 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த வெள்ளியன்று, 117 கோடி ரூபாய், சனிக்கிழமை அன்று 141 கோடி ரூபாய் என, விற்பனை 3 மடங்கு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.215 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்