SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சல்லடம், தோப்ரா விற்பனை விறுவிறு

2019-04-16@ 12:56:43

மதுரை: அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, கள்ளழகர் வேடமணியும் பக்தர்கள் அணியும் சல்லடம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோப்ரா ஆகியவைகளின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் வருகிற 19ம் தேதி காலை நடைபெறுகிறது. அவரை வரவேற்கும் வகையில் பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து தண்ணீரை பீய்ச்சியடிப்பர். கருப்பண்ணசுவாமி வேடமணிந்து திரி ஏந்தி வருவர். இந்நிலையில், கள்ளழகர் வேடத்திற்கான ஆடைகள் புதுமண்டபம், கீழ மாசிவீதி, அம்மன் சன்னதி பகுதிகளில உள்ள தையல் கலைஞர்கள் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

கீழமாசி வீதி பகுதியில் சல்லடம், சலங்கைகள், குஞ்சம், தலைப்பாகைகள் என அனைத்தும் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. இது குறித்து புதுமண்டபம் பகுதி விற்பனையாளர் கணேசன் கூறுகையில், ‘பக்தர்கள் கள்ளழகர், கருப்பண்ணசாமி வேடமணிவதற்கான ஆடைகளான சல்லடம் (பேண்ட், உள்ளாடை) ரெடிமேடாக தைத்து விற்பனை செய்கிறோம். கை கேடயம், உருமா கொட்டான் சேலை (தலைப்பாகை), தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கான தோப்ரா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரெடிமேட் சல்லடம் செட் (பேண்ட்) சிறியவர்களுக்கு ரூ.400 பெரியவர்களுக்கு ரூ.800 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், தோப்ரா ரூ.400ல் இருந்து விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்