SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியால் கருகும் தக்காளி

2019-04-16@ 12:55:51

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி வறட்சியின் காரணமாக கருகியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் ராமகிருஷ்ணபுரம், ஜக்கம்மாள்பட்டி, கதிர்நரசிங்கபுரம், சித்தார்பட்டி, வண்டியூர், பாலக்கோம்பை, இராஜதானி, ஜி.உசிலம்பட்டி புலிமான்கோம்பை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கனி வகைகளையும், மரிக்கொழுந்து, செவ்வந்தி, மல்லிகை, ரோஜா போன்ற பூ வகைகளை சாகுபடி செய்துள்ளனர்.

இதற்கு முறையாக களை எடுத்தல், உரம் வைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட உழவாடை பணிகள் செய்தனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் சிறப்பு குறைந்து விட்டது. மேலும் பங்குனி மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு போதிய தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியின் காரணமாக கருகி வருகிறது.

இதுகுறித்து விவசாயி கூறுகையில், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கால்வாய், போர்வெல், கிணறு போன்ற பாசன வசதிகள் மூலம் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் ஆறு, கிணறு, குளம், கண்மாய், ஆழ்துளைக் கிணறு, தடுப்பணைகள், அணைகள் உள்ளிட்ட அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பருவமழையை நம்பி மானாவரி நிலங்களில் விதைக்கப்பட்ட, பயிர்களும் கருகி விட்டன. இதன் மூலமாக விவசாயிகளுக்கு பல்லாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விவசாயிக போர்வெல் மற்றும் கிணறுகளில் உள்ள தண்ணீருக்கேற்ப சொட்டு நீர் தெளிப்பான் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 7 தினங்களுக்கு முன்கிணற்றில் உள்ள தண்ணீர் திடீரென வற்றியதால், 1 குழி பரப்பளவில் சாகுபடி செய்துள்ள தக்காளி செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி காய்ந்து நிற்கிறது’’என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்