SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை அக்காவுக்கு டெல்லி போட்ட கண்டிஷன் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-04-16@ 01:52:19

‘‘பணப்பட்டுவாடா எல்லாம் ஜோரா நடக்குதுபோல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு வகையான பணப்பட்டுவாடா, மக்களவை தொகுதியில் ஒரு மாதிரியான பணப்பட்டுவாடாவை இலை கூட்டணி கட்சிகள் மேற்கொண்டுள்ளன...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.
‘‘இதிலும் பாரபட்சமா...’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.

‘‘ம்... இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் எம்எல்ஏ தேர்தலுக்கு ஆயிரம் ரூபாய், எம்பி தேர்தலுக்கு ஆயிரம்னு ஒரு ஓட்டுக்கு மொத்தமாக 2 ஆயிரம் தர்றாங்க.. எம்பி தேர்தல் மட்டும் உள்ள பகுதிகளில் 500 முதல் ஆயிரம் வரை தர்றாங்க... அதிலும் நம்பிக்கைக்குரிய வாக்காளர்கள் உள்ள பகுதி என்றால் ஆயிரம் நிச்சயம்... மற்ற வாக்காளர்களுக்கு ஐநூறு வழங்கி வருகிறார்களாம்... கிராமங்கள், நகர்ப்புறங்களில் ஏறக்குறைய பணப்பட்டுவாடாவை இலைக்கட்சி கூட்டணி முடித்துவிட்டதாம்... இன்னும் நகரங்களில் ஓரிரு நாளில் முழுமையாக முடித்துவிடுவார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரெய்டு எல்லாம் நடக்குதே இது என்ன கணக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நேரடியாக பார்த்தால் இது எல்லாம் இலை கட்சி சம்பந்தப்பட்டுள்ள மாதிரியான தோற்றத்தை அதிகாரிகள் ஏற்படுத்தறாங்க... அதாவது நாங்க நேர்மையாக ரெய்டு நடத்துறோம்னு காட்ட நினைக்கிறாங்க... அப்புறம் விசாரித்ததில் இந்த ரெய்டு குறித்த ரகசிய தகவல்கள் எல்லாம் தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பே இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு சென்றதாம்... இது முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு என்றே சொல்கிறார்கள்... தேர்தல் ரெய்டுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையாம்... ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டும்தான் தேர்தலை குறி வைச்சு பண்றாங்க என்ற மாயையை உடைக்கத்தான் இந்த ரெய்டாம்... அப்படினு பார்த்தால் இப்போது பிடிப்பட்ட பணத்துக்கு அபராதத்தை கட்டிவிட்டு ஜாலியாக வந்துவிடலாம்... ஆனால் மக்களின் பார்வைக்கு இலை கட்சியினருக்கு வேண்டியவர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தியது மாதிரி பாவ்லா காட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகரு என்ன சொல்றாரு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தல் நெருங்க நெருங்க பதற்றமாக இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனதில் இருப்பதை ஓப்பனாக பேசிக் கொண்டதாக அடிப்பொடிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கு. தேர்தலில் வெற்றி இப்போது முக்கியமில்ல டெபாசிட் போகக் கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம்... இதற்காக பிரசார வீடியோ, ஆடியோ பிரசாரங்களில் தீவிரமாக இறங்கி உள்ளாராம்... இதற்காக பிரபல முகங்களை இறக்கியும் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையாம்... அவருக்கு ரிப்போர்ட் அளித்த தனியார் நிறுவனம் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அது சரி, தாமரை தலைவியை காணோம்னு வடமாவட்ட மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சு இருக்காங்களாமே... அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ரொம்பவே உபயோகமாக இருந்தவங்க காணாமல் போகவே, சில மீம்ஸ் கிரியேட்டர்களும் தூத்துக்குடியில் டேரா போட்டு இருக்காங்களாம்... வட மாவட்ட மக்களும் அக்கா வராத நாளில்லையே... உங்களை எப்போது பார்ப்போம்னு தெரியலையே... பேட்டினு கேட்டா ஓடோடி வந்து தருவீங்களே... இப்ப அக்கா பேச்சை டிவியில பார்க்க முடியல... போட்டோவை பார்க்க முடியலைன்னு ஒரே புலம்பல்... தூத்துக்குடியில் வெற்றியே பெற்றாகணும் என்ற நினைப்பில் சென்னையில் இருந்த தன் ஆதரவாளர்களை எல்லாம் கூட்டிட்டு போயிட்டாராம்... கட்சி மேலிடமும் நீங்க ஜெயிச்சுட்டு சென்னை வந்தாபோதும்... நீங்க குடுக்கிற பேட்டியில தான் கட்சி ஜெயிச்சுடும்னு நினைக்காதீங்க... முதல்ல உங்க பேச்சால உங்க தொகுதியில ஜெயிச்சுட்டு வாங்கனு சொல்லி தூத்துக்குடியோட அவங்களை முடக்கி போட்டுட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ நீங்க சொன்ன மாதிரியே கோயம்பேடுகாரர் வீடியோ பிரசாரத்தை வெளியிட்டுள்ளார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ மக்களே என்ற வார்த்தை மெல்லிய குரலில்தான் கேட்குமாம். சத்தமாக பேச கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை சொல்லிட்டாங்க... அவரை காட்டிதான் 4 சீட் வாங்கினாங்க... அதுக்காக தான் வீடியோ பிரசாரம். அப்புறம் அவர் இப்போது இருக்கிற நிலையில பேசினா அது சிம்பதியா மாறி பின்னர் ஓட்டாக மாறும்னு கூட்டணி கட்சிகள் ஐடியா கொடுத்ததாம்... அதனால தான் திடீர்னு அவரை பக்குவமாக அழைத்து வந்து பேச வைக்கப்போறாங்களாம்... அதிகபட்சம் 100 கிலோ மீட்டருக்குள் தான் அவரு பிரசார திட்டம் இருக்காம்... அதுக்கு மேலே அவருக்கு உடம்பு ஒத்துழைக்காது என்பதால பெரும்பாலான இடங்களில் கை கூப்பியபடி அவர் வேனிலேயே செல்வாராம்... குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பேச முடிவு செய்துள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் பாக்ஸ் என்ன சொல்லுது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடந்த சனிக்கிழமையில் இருந்துதான் கிப்ட் பாக்ஸ் கரன்சி டிஸ்டிரிபியூசன் ஆரம்பிக்க முடிவு செய்தாங்களாம்... பைனான்சியர்கள், பிசினஸ்மேன்கள், தொழிலதிபர்கள்னு பலரிடம் பேசிட்டாங்களாம்... இப்போதைக்கு நாங்கள் பணத்தை வெளியே எடுக்க முடியாது... தேர்தல் முடிந்ததும் உங்கள் பணம் உங்களுக்கு வந்துசேரும்... யார் பிடித்தாலும் நீங்கள் வங்கி கணக்கு மற்றும் தொழில் கணக்குகளை காட்டி பணத்தை காப்பாற்றிடலாம்... ஐடி ரெய்டு வராது... வந்தாலும் பிரச்னை இல்லை என்று கிப்ட் பாக்ஸ்காரர் சொன்னாராம்... அதுவும் இவருக்கு பைனான்ஸ் செய்ய முன்வந்தது எல்லாரும் நகர வாசனையே தெரியாத பெரும் புள்ளிகளாம்... எனவே ஐடிக்கு எங்கே தெரியப்போகிறது என்று சம்மதித்தார்களாம்... இப்போது அதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஐடி ரெய்டில் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்களாம்... பணம் கொடுத்தால் தானே ஓட்டு சிதறும்... பணத்தை தடுத்துவிட்டால் ஓட்டு சிதறாது என்பது டெல்லி கணக்கு... அதை கட்சிதமாக செய்து வர்றாங்களாம்... இதனால் கிப்ட் பாக்ஸ்காரர் நொந்துபோனது இல்லாம... அவரை நம்பிய தொழிலதிபர்கள் இப்போது அவர் மீது கடும் கோபத்தில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்