SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

2019-04-15@ 19:50:10

சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற  உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெறுவதாக தேர்தல்  ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள், பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.

 இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று இரவு  அதிரடியாக எம்எல்ஏக்கள் விடுதியின் சி-பிரிவில் உள்ள வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறை, அளுங்கட்சி எம்எல்ஏக்கள் அறையில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம்  குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதேநேரம், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 1 மாதமாக தேனி மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும்  பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஒரு மாதமாக சென்னைக்கு அவர் வராத நிலையில் திடீரென சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.  மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் தற்போது தங்கியிள்ள இடங்களில் எந்த வித சோதனையும் நடத்தாமல் யாரும் இல்லாத வீட்டில் திடீரென நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் பணம்  பட்டுவாடாவை திசைத்திருப்பவே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தியுள்ளதாகவும், இந்த சோதனை வெறும் கண்துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அறையில் கைப்பற்றப்பட்ட பைகளில் இருந்து எடுக்கப்பட்ட துண்டுசீட்டுகள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்