SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த தடையை எதிர்த்து வழக்கு : மெட்ரிக் பள்ளி இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

2019-04-15@ 17:51:42

மதுரை : விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தடை விதித்திருந்தது. குழந்தைகள், மாணவர்கள் கோடை விடுமுறையை உறவினர்களுடன் செலவழிக்க வேண்டும். கடும் வெப்பத்தால், கோடைக்கால நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. எனவே விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவிற்கு தடைகோரி விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நீட் தேர்வு, ஐ.ஐ.டி., தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் கோடை விடுமுறையில் தான் நடக்கின்றன. இதனை கணக்கில் கொள்ளாமல் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் அதனை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு கோடை கால சிறப்பு வகுப்புகளுக்கு விதித்த தடை குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்